‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு புதிய பட்டம்

‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ‘வித்தக வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

‘மக்கள் செல்வன்’ பட்டத்தைத் தொடர்ந்து விஜய் சேதுபதிக்கு ‘வித்தக வீரர்’ என்ற பட்டம் வழங்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில், பொங்கல் விழா, பெரியார் விருது வழங்கும் விழா, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றத்தின் 24ஆம் ஆண்டு விழா ஆகியவை நேற்று தொடங்கின. கரகாட்டம், பறையாட்டத்துடன் தொடங்கிய இந்த விழாவை, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி தொடங்கி வைத்தார்.

இந்த விழாவில், நடிகர் விஜய் சேதுபதி, இயக்குநர் கோபி நயினார், கவிஞர் செவ்வியன், பறை இசைக்கலைஞர் வேலு ஆசான், ஓவியர் ஹாசிப்கான் ஆகியோருக்கு பெரியார் விருது வழங்கப்பட்டது. அப்போது, ‘வித்தக வீரர்’ என்ற பட்டத்தை விஜய் சேதுபதிக்கு வழங்கினார் கி.வீரமணி.

எந்த கேரக்டராக இருந்தாலும், தன்னுடைய நடிப்பால் அதை சிறப்பாக வெளிக்கொண்டு வருபவர் விஜய் சேதுபதி. சீனு ராமசாமி இயக்கத்தில் வெளியான ‘தர்மதுரை’ படத்தில், அவருக்கு ‘மக்கள் செல்வன்’ என்ற பட்டத்தைத் தந்திருந்தார் சீனும் ராமசாமி. அதன்பிறகு விஜய் சேதுபதியை அந்தப் பட்டத்துடன் குறிப்பிட ஆரம்பித்தனர் அவருடைய ரசிகர்கள்.

அதைத் தொடர்ந்து, தற்போது ‘வித்தக வீரர்’ என்ற பட்டமும் கொடுக்கப்பட்டிருப்பதால் விஜய் சேதுபதி ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

×Close
×Close