ரஜினிக்கு வில்லனா விஜய் சேதுபதி?

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

ரஜினி நடிப்பில் கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் படத்தில், ரஜினிக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

தற்போதைய தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில், வித்தியாசமான வேடங்களை விரும்பிச் செய்பவர் யார் என்றால், அது விஜய் சேதுபதி தான். ஹீரோ – வில்லன், இளைஞன் – முதியவர் என்ற பாகுபாடு பார்க்காமல், தன்னுடைய கேரக்டர் பிடித்திருந்தால் மறுக்காமல் நடித்துக் கொடுப்பவர் விஜய் சேதுபதி.

தாதாவாக விஜய் சேதுபதி நடிப்பில் கடந்த வருடம் ரிலீஸான ‘விக்ரம் வேதா’ சூப்பர் டூப்பர் ஹிட்டானது. இந்நிலையில், ரஜினி நடிக்கும் அடுத்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க இருக்கிறார். சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்தில், வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் எனத் தகவல்கள் பரவி வருகின்றன.

ரஜினி நடிப்பில் ‘2.0’ மற்றும் ‘காலா’ என இரண்டு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகி வருகின்றன. முதலில் ஷூட்டிங் முடிந்தாலும், போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் தாமதமாவதால் ஷங்கர் இயக்கியுள்ள ‘2.0’ படத்தின் ரிலீஸ் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. ஆனால், அதற்குப் பிறகு ஷூட்டிங் போன ‘காலா’ படம் வருகிற ஏப்ரல் மாதம் 27ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பா.இரஞ்சித் இயக்கியுள்ள ‘காலா’ படத்தின் டீஸர், மார்ச் 1ஆம் தேதி ரிலீஸாக இருக்கிறது.

×Close
×Close