சி.பிரேம் குமார் என்பவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி, த்ரிஷா நடிக்கும் ரொமான்டிக் காதல் திரைப்படம் '96'. முதன்முதலாக விஜய்சேதுபதி - த்ரிஷா ஜோடி சேரும் இப்படத்தின் பூஜை இன்று போடப்பட்டது. 'வயசானாலும் உன் அழகு இன்னும் குறையல' என்று சொல்லும் அளவிற்கு க்யூட்டாக பூஜையில் கலந்து கொண்டார் த்ரிஷா.
/tamil-ie/media/media_files/uploads/2017/06/a525-300x217.jpg)
இயக்குனர் பிரேம் குமார் 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' படத்தின் ஒளிப்பதிவாளர் என்பது கூடுதல் ஸ்பெஷல். பாலாஜி தரணீதரன் தற்போது இயக்கிவரும் 'ஒரு பக்க கதை' படத்தில் இசையமைப்பாளராக பணியாற்றிவரும் கோவிந்த் மேனன் என்பவர் தான் இப்படத்திற்கும் இசையமைக்கிறார்.
/tamil-ie/media/media_files/uploads/2017/06/a527-300x217.jpg)
எல்லாம் சரி! அது ஏன் 96-னு டைட்டில் வச்சாங்கன்னு யோசிக்குறீங்களா? ஒருவேளை 1996-ல் நடந்த காதல் கதையோ!?