இயக்குநர் வெற்றிமாறனின் பீரியட் ஆக்ஷன் டிராமாவான விடுதலை பாகம் 2 டிசம்பர் 20 வெள்ளியன்று திரையரங்குகளில் வெளியானது. விஜய் சேதுபதி, மஞ்சு வாரியர், சூரி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள இப்படத்திற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைத்துள்ளார். படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் வெளியானது.
முதல் பாகத்தில் போராளி குழுவின் தலைவரான பெருமாள் வாத்தியார் (விஜய் சேதுபதி) கைது செய்யப்படுவது பற்றிய கதையைச் சொன்னார்கள். தற்போது வெளியாகி உள்ள இரண்டாம் பாகத்தில் கைது செய்யப்பட்ட பெருமாள் விசாரணைக்கு பின் ஒரு காட்டு வழியாக நீதிமன்றத்திற்கு அழைத்து செல்லப்படுகிறார்.
வாத்தியார் விஜய் சேதுபதி, தன்னுடைய முன் கதையை சொல்ல துவங்குகிறார். விஜய் சேதுபதியால் அதிகாரத்தையும், அரசாங்கத்தையும் எதிர்க்க முடிந்ததா? அவருடைய முடிவு என்ன? விஜய் சேதுபதியின் கதையை கேட்ட சூரி யார் பக்கம் நின்றார்? என்பது மீதி கதை.
இந்நிலையில் சாக்னில்க் கூற்று படி, படம் வெளியான முதல் நாளில் இந்தியாவில் சுமார் 7 கோடி ரூபாய் வசூலித்துள்ளது. இது விடுதலை 1 முதல் நாள் வசூல் விட அதிகம். விடுதலை 1 மார்ச் 2023-ல் வெளியானது. அதன் முதல் நாளில் ரூ 3.5 கோடி வசூலித்தது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“