Advertisment

காதலர் தினத்துக்கு விஜய் சேதுபதியின் கிஃப்ட் என்ன தெரியுமா?

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay sethupathi

காதலர் தினத்தை முன்னிட்டு விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ஒரு பாடலை வெளியிட முடிவு செய்துள்ளனர்.

Advertisment

‘ரெளத்திரம்’, ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’, ‘காஷ்மோரா’ படங்களை இயக்கியவர் கோகுல். இவர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘ஜுங்கா’. விஜய் சேதுபதி ஹீரோவாக நடித்துள்ள இந்தப் படத்தில், சயிஷா மற்றும் நேகா சர்மா இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர்.

யோகி பாபு முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்தப் படத்துக்கு, சித்தார்த் விபின் இசையமைத்துள்ளார். முதன்முறையாக அதிக பட்ஜெட்டில் நடித்துள்ள விஜய் சேதுபதி, அவரே இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார்.

பிப்ரவரி 14ஆம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ‘ஜுங்கா’ படத்தில் இருந்து ஒரு பாடலை ரிலீஸ் செய்ய இருக்கின்றனர். ‘கூட்டிப்போ கூடவே’ என்று தொடங்கும் இந்தப் பாடல் தான் காதலர் தினத்துக்கு ரிலீஸாக இருக்கிறது. விஜய் சேதுபதி ரசிகர்களுக்கு காதலர் தினத்தின் மிகப்பெரிய கிஃப்ட் இதுவாகத்தான் இருக்கப் போகிறது.

Tamil Cinema Vijay Sethupathi Junga Movie
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment