விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ : நாளை டீஸர் ரிலீஸ்!

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.

By: November 28, 2017, 1:29:43 PM

விஜய் சேதுபதி நடித்துள்ள ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தின் டீஸர், நாளை மாலை ரிலீஸாகிறது.

விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் ஆறுமுக குமார். விஜய் சேதுபதியுடன் இணைந்து கெளதம் கார்த்திக்கும் நடித்துள்ளார். நிகாரிகா, இந்தப் படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும், ரமேஷ் திலக் மற்றும் விஜி சந்திரசேகர் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில், ‘எமன்’ என்ற கேரக்டரில் பழங்குடி மக்களின் தலைவனாக நடித்திருக்கிறார் விஜய் சேதுபதி. அதுமட்டுமல்ல, மொத்தம் 8 கெட்டப்புகளில் இந்தப் படத்தில் நடித்துள்ளாராம் விஜய் சேதுபதி. ஜஸ்டின் பிரபாகரன் இந்தப் படத்துக்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் டீஸர், நாளை மாலை 6 மணிக்கு ரிலீஸாக இருக்கிறது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vijay sethupathis oru nalla naal paathu solren teaser release tomorrow

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X