தமிழ் சினிமாவில் மிகப்பெரிய மல்டி ஸ்டார்ஸ் திரைப்பட அறிவிப்பு இன்று வெளியாகியுள்ளது. மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் தயாரிக்க மணிரத்னம் இயக்கத்தில் ஒரே படத்தில் விஜய் சேதுபதி, சிம்பு, அரவிந்த் சுவாமி, பஹத் ஃபாசில், ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோர் நடிக்க இருப்பதாக இன்று அறிவிக்கப்பட்டுள்ளது. எடிட்டிங் பணியை ஸ்ரீகர் பிரசாத் மேற்கொள்கிறார்.
ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, சந்தோஷ் சிவன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். மற்ற டெக்னீஷியன்கள் குறித்த முழுமையான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என தெரிகிறது. தென்னிந்தியாவில் இணைந்துள்ள மிகப்பெரிய மல்டி ஸ்டார்ஸ் படம் இதுவாகத் தான் இருக்கும் என தெரிகிறது.
The Big Multi-starrer @MadrasTalkies_ @thearvindswami #str #VijaySethupathy @twitfahadh #jotika @aishu_dil pic.twitter.com/EBH07qmOh6
— Ramesh Bala (@rameshlaus) 8 October 2017