Advertisment

சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் புது லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் ஷில்பா என்ற பெயரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

author-image
manik prabhu
புதுப்பிக்கப்பட்டது
New Update
சூப்பர் டீலக்ஸ் படத்தில் விஜய் சேதுபதியின் புது லுக் வெளியீடு: ரசிகர்கள் உற்சாகம்

சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புது லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இது அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

Advertisment

ஆரண்ய காண்டம் படத்தைத் தொடர்ந்து, தியாகராஜன் குமாரராஜாவின் இயக்கத்தில் உருவாகி வரும் படம் "சூப்பர் டீலக்ஸ்". இந்த படத்திற்கு முதலில் "அநீதி கதைகள்" என பெயரிடிரு ந்தனர். ஆனால், தற்போது "சூப்பர் டீலக்ஸ்" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

publive-image

விஜய் சேதுபதி, ஃபகத் பாசில், சமந்தா உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்துக்கு பி.எஸ்.வினோத் ஒளிப்பதிவு செய்து வருகிறார். படத்தில் தனது கதாபாத்திரத்தின் லுக்கை சமந்தா ஏற்கனவே தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் புது லுக்கை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இந்த படத்தில் திருநங்கை கதாபாத்திரத்தில் ஷில்பா என்ற பெயரில் விஜய் சேதுபதி நடித்து வருகிறார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சூப்பர் டீலக்ஸ் படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் இந்த புது லுக், அவரது ரசிகர்களை உற்சாகமடைய செய்ததுடன், சமூக வலைதளங்களில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment