சகாப்த நடிகை கெட்டப்புக்கு மாறிய விஜய் டிவி சீரியல் நடிகை: ஆனாலும் அந்த தன்னடக்கம் இருக்கே..!

Vijay TV anbudan kushi serial actress getup like old actress photo goes viral: பழம்பெரும் நடிகை கெட்டப்பில், கீர்த்தி சுரேஷூக்கு நன்றி சொன்ன அன்புடன் குஷி சீரியல் நடிகை ரேஷ்மா; வைரல் போட்டோ

விஜய் டிவி சீரியல் நடிகை ரேஷ்மா பழம்பெரும் நடிகை ஒருவரின் கெட்டப்பில் வெளியிட்டு இருக்கும் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் அன்புடன் குஷி சீரியலுக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த சீரியலில் ப்ரஜின் கதாநாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக ரேஷ்மா வெங்கடேஷ் நடித்து வருகிறார். ரேஷ்மா, அன்புடன் குஷி சீரியலுக்கு முன்னர் ஆதித்யா தொலைக்காட்சியில் தொகுப்பாளராக இருந்துள்ளார்.

இந்த நிலையில், ரேஷ்மா பழம்பெரும் நடிகை சாவித்திரியின் கெட்டப்பில் உள்ள புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், சாவித்திரி அம்மா கெட்டப்பில் இருப்பதற்கு பெருமைப்படுகிறேன். சாவித்திரி அம்மாவை இந்த தலைமுறைக்கு கொண்டு வந்ததற்காக நடிகை கீர்த்தி சுரேஷூக்கு நன்றி எனவும் பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. நெட்டிசன்கள் இந்த புகைப்படத்திற்கு லைக் செய்து வருகின்றனர்.

நடிகை கீர்த்தி சுரேஷ், சாவித்திரி அவர்களின் வாழ்க்கை வரலாற்று படமான  நடிகையர் திலகம் திரைப்படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ரேஷ்மா இதற்கு முன்னர் நடிகை சாவித்திரியின் பாடலான ’வாரோயோ வெண்ணிலாவே கேளாயோ எங்கள் கதையை’ என்ற பாடலுக்கு நடித்து வீடியோவாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv anbudan kushi serial actress getup like old actress photo goes viral

Next Story
நிஜம், நம்புங்க..! கண்ணம்மா, பாரதி, 2 குழந்தைங்க சந்தோஷமா கூடி இருக்காங்க!Bharathi kannama serial Tamil News: Bharathi kannama shooting spot pics goes viral
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com