பாக்யலட்சுமி சீரியலில் இருந்து விலக 2 காரணம்… ஷாக் கொடுத்த ஜெனிஃபர்!

Vijay TV bakiyalakshmi serial jennifer talks about her quit from serial: தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அது பிடிக்கவில்லை என்பதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறேன் என்று ஜெனிபர் கூறியிருக்கிறார்.

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகாவாக நடித்த ஜெனிஃபர், சீரியலிலிருந்து ஏன் விலகினேன் என வீடியோ மூலம் விளக்கம் அளித்துள்ளார்.

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா கதாப்பாத்திரத்தில் நடித்து வந்தவர் நந்திதா ஜெனிபர். ஜெனிபர் ஈர நிலம், இம்சை அரசன் 23ஆம் புலிகேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர். சன் டிவியில் லட்சுமி ஸ்டோர்ஸ் உள்ளிட்ட சீரியல்களிலும் ஜெனிபர் நடித்துள்ளார்.

பாக்கியலட்சுமி சீரியலில் சவாலான கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்து வந்த நிலையில், திடீரென சீரியலில் இருந்து விலகுவதாக அறிவித்தார். ஜெனிபர் சீரியலில் இருந்து விலகியது, ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்த நிலையில், அதற்கான காரணம் என்னவாக இருக்கும் என ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், ஜெனிபரே அதற்கான காரணத்தை கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கணவர் கூறுகையில், ஜெனிபர் இந்த சீரியலை விட்டு விலக இரண்டு காரணம் இருக்கிறது. ஒன்று பெர்சனல் காரணம். அதனை வேறொரு வீடியோவில் சீக்கிரம் சொல்வோம் என்று கூறியிருக்கிறார்.

மற்றொரு காரணம், இந்த சீரியலில் ஜெனிபர் இதுவரை நடித்து வந்த பாசிட்டிவ் கேரகடர் மாறப்போகிறது. கதை வேறு மாதிரியாக மாறப்போகிறது. அதனால் நல்ல பெயர் வாங்கிவிட்டு இப்படி செய்ய உடன்பாடு இல்லை. இதனால் தான் விலகிவிட்டார் என்று கூறியுள்ளார்.

பாக்கியலட்சுமியின் தோழியாக, இதுவரை பாசிட்டிவ் ரோலில் நடித்து வந்த ஜெனிபருக்கு ரசிகர்களிடம் நல்ல பெயர் இருந்து வருகிறது. இவரைப் பற்றி இதுவரை அதிகமான நெகட்டிவ் கமெண்ட்கள் வந்ததில்லை. ஆனால் இனி கதை வேறு மாதிரியாக போகப்போகிறது. அதில் தன்னுடைய கேரக்டரை ரசிகர்கள் வேறு மாதிரி பார்க்க ஆரம்பித்துவிடுவார்கள். அது பிடிக்கவில்லை என்பதால் தான் இந்த சீரியலில் இருந்து விலகி இருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.

ஜெனிபர் அளித்துள்ள இந்த விளக்கம் ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை அளித்துள்ளது. சீரியலை விட்டு விலகினாலும் ரசிகர்கள் ஜெனிபருக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். வேறு ஒரு சீரியலில் ஜெனிபரை எதிர்ப்பார்ப்பதாகவும் ரசிகர்கள் கூறி வருகின்றனர். பிடிக்காத விஷயத்தைச் செய்யாமல் சீரியலை விட்டு விலகியது நல்லது தான் என ஜெனிபருக்கு ரசிகர்கள் கூறிவருகின்றனர். மேலும் ரசிகர்களுக்காக, இந்த விஷயத்தை வீடியோ மூலம் சொன்னது மிகுந்த மகிழ்ச்சியளிப்பதாகவும் ரசிகர்கள் கூறியுள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv bakiyalakshmi serial jennifer talks about her quit from serial

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com