விஜய் டிவியின் குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக குக்குகளும் கோமாளிகளும் மீண்டும் இணைந்துள்ள புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பை பெற்ற ரியாலிட்டி ஷோ குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சியின் இரண்டு சீசன்கள் குறைந்த இடைவெளியில் அடுத்த ஒளிப்பரப்பான நிலையில், மூன்றாவது சீசனுக்காக ரசிகர்கள் காத்திருக்கின்றனர். நிகழ்ச்சியில் போட்டியாளர்களுடன் சேர்ந்து கோமாளிகள் செய்யும் சேட்டைக்கு சிரித்து சிரித்து உங்கள் வயிறு புண்ணாகும். அந்த அளவுக்கு சுவாரஸ்யத்தையும் நகைச்சுவையும் தரக்கூடியது இந்த நிகழ்ச்சி.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட போட்டியாளர்களும் கோமாளிகளும், தற்போது பல்வேறு படங்களில் நடித்து வருகின்றனர். பவித்ரா லட்சுமி, காமெடி நடிகர் சதீஷ்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். அஸ்வின் மற்றும் புகழ் சில படங்களில் கமிட் ஆகியுள்ள நிலையில், இருவரும் சேர்ந்தும் ஒரு படத்தில் நடிக்கின்றனர். இதில், புகழ் காமெடி ராஜா கலக்கல் ராணி நிகழ்ச்சியை விட்டு செல்லும் அளவுக்கு படங்களில் பிசியாகியுள்ளார். இதேபோல் தர்ஷா மற்றும் ஷிவாங்கி ஆகியோரும் படவாய்ப்புகளைப் பெற்றுள்ளனர்.
இந்த நிலையில், குக் வித் கோமாளி பிரபலங்கள் ஒன்று கூடி இருக்கும் புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகி வந்தன.
விஜய் டிவி ஒவ்வொரு ரியாலிட்டி ஷோ முடிந்த பிறகு அதன் கொண்டாட்டம் என்ற நிகழ்ச்சியை நடத்தி வருகிறது. ஒவ்வொரு பிக் பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகும் பிக் பாஸ் கொண்டாட்டம் நடந்தது. இதேபோல் சீரியல்களுக்கும் கொண்டாட்டம் நிகழ்ச்சியை நடத்துகிறது. அந்த வகையில் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கான கொண்டாட்டம் நிகழ்ச்சியை விஜய் டிவி அடுத்த வாரம் ஒளிப்பரப்ப உள்ளது.
இந்த குக் வித் கோமாளி கொண்டாட்டம் நிகழ்ச்சிக்காக, அந்த நிகழ்ச்சியின் நட்சத்திரங்கள் ஒன்று கூடியுள்ளனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. இந்த கொண்டாட்டம் நிகழ்ச்சியையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மதியம் 3 மணிக்கு ஒளிப்பரப்பாக உள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil