குக் வித் வித் கோமாளி நடிகை ஷாக்: அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்தது யார்?

Vijay TV cook with comali sivaangikrish Go back Modi Political tweet issues : குக் வித் வித் கோமாளி நடிகை ஷாக்: அரசியல் சர்ச்சையில் சிக்க வைத்தது யார்?

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பெயர் பெற்ற சிவாங்கி தான் ட்விட்டரில் #GobackModi என்ற ஹேஷ்டேக் பயன்படுத்த வில்லை என்றும், ட்விட்டர் தளத்தில் தனக்கு அக்கவுண்ட் இல்லை என்றும் தெரிவித்தார்.

காலை சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கும் விதமாக, பிரதமர் நரேந்திர மோடி ஒரு நாள் பயணமாக சென்னை வந்தார். அதன் காரணமாக, ட்விட்டரில் #GobackModi என்ற  ஹேஷ்டேக்  வைரலானது.

நேற்று, sivaangikrish என்ற ட்விட்டர் கணக்கில் இருந்து  #GobackModi என்று ட்வீட் செய்யப்பட்டது. சுமார், 11,000 க்கும் மேற்பட்ட பாலோயர்ஸ் உள்ளனர். இந்த கணக்கு கடந்தாண்டு டிசம்பர் மாதம் தான் உருவாக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், நடிகை சிவாங்கி தான் #GobackModi என்று ட்வீட் செய்ய வில்லை, ட்விட்டரில் தனக்கு கணக்கு இல்லை என்றும் தெளிவுபடுத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

குக் வித் கோமாளி  ஷோவில், அனைவரின் கவனத்தையும் ஈர்த்த போட்டியாளர் என்றால் அது பாடகர் சிவாங்கி தான். அவர் தனது நகைச்சுவையான நடிப்பின் மூலம் இந்த ஷோடிவில் ஒரு மேதையாகவும் மாறிவருகிறார்.

இந்நிலையில், அண்மையில் எபிசோடில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட நடிகர் சிவகார்த்திகேயன் சிவாங்கியின் நகைச்சுவை திறனை பாராட்டினார். மேலும் சிவாங்கியின் பெரிய ரசிகர் என்பதை வெளிப்படுத்தினார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv cook with comali sivaangikrish go back modi political tweet issues

Next Story
ரசிகர்கள் கண்ணியம் கட்டுப்பாட்டை கடைபிடிக்க வேண்டும் – நடிகர் அஜித் வேண்டுகோள்Actor Ajith kumar, actor ajith statement, ajith Fans must follow dignity discipline, அஜித், தல அஜித், அஜித் குமார், வலிமை, வலிமை அப்டேட், ரசிகர்களுக்கு அஜித் வேண்டுகோள், கண்ணியத்தையும் கட்டுப்பாட்டையும் கடைபிடிக்க வேண்டும், valimai update, ajith request to fans, ajith sad, ajith statement, ajith statement to fans, அஜித் ரசிகர்கள்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express