உதயநிதி ஸ்டாலின் படத்தை வாங்கியது விஜய் டிவி

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
nimir trailer

nimir trailer

உதயநிதி ஸ்டாலின் நடித்துள்ள ‘நிமிர்’ படத்தின்  தொலைக்காட்சி உரிமையை, ஸ்டார் விஜய் டிவி வாங்கியுள்ளது.

Advertisment

ப்ரியதர்ஷன் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘நிமிர்’. திலீஷ் போத்தன் இயக்கத்தில், ஃபஹத் ஃபாசில், அபர்ணா பாலமுரளி நடிப்பில் 2016ஆம் ஆண்டு ரிலீஸான மலையாளப் படம் ‘மகேஷிண்டே பிரதிகாரம்’. இந்தப் படத்தைத்தான் தமிழில் ரீமேக் செய்துள்ளார் ப்ரியதர்ஷன்.

‘நிமிர்’ படத்தில் நமீதா ப்ரமோத், பார்வதி நாயர் இருவரும் ஹீரோயின்களாக நடித்துள்ளனர். இயக்குநர்கள் மகேந்திரன் மற்றும் அகத்தியன் இருவரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும், சமுத்திரக்கனி, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோரும் நடித்துள்ளனர்.

மூன்ஷாட் எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் சந்தோஷ் டி குருவில்லா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் இந்தப் படத்தை வெளியிடுகிறது. தர்புகா சிவா, அஜ்னீஷ் லோக்நாத் இருவரும் சேர்ந்து இசையமைத்துள்ளனர். ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்ய, அய்யப்பன் நாயர் எடிட் செய்துள்ளார்.

Advertisment
Advertisements

‘நிமிர்’ படத்தின் தொலைக்காட்சி உரிமையை ஸ்டார் விஜய் டிவி மிகப்பெரிய தொகை கொடுத்து வாங்கியுள்ளது. ‘இது எல்லா மக்களும் பார்க்கக் கூடிய ஜனரஞ்சகமான படம்’ என விஜய் டிவியின் பொது மேலாளர் கிருஷ்ணன் குட்டி பாராட்டியுள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் நடித்த படத்தை விஜய் டிவி வாங்குவது, இது மூன்றாவது முறையாகும். ஏற்கெனவே ‘சரவணன் இருக்க பயமேன்’ மற்றும் ‘மனிதன்’ படங்களின் தொலைக்காட்சி உரிமையை விஜய் டிவிதான் வாங்கியுள்ளது.

Parvatii Nair Udhayanidhi Stalin Tamil Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: