Vijay TV Serial: திரைப்படங்களின் பெயரை சீரியல்களுக்கு வைப்பது, தற்போது வாடிக்கையாகி வருகிறது. முதன் முதலில் ‘கல்யாணப் பரிசு’ என்ற சீரியலின் மூலம், சன் டிவி இந்த டிரெண்டை தொடங்கி வைத்தது. அதன் பிறகு விஜய் டிவி, ஜி தமிழ் போன்ற மற்ற முன்னணி தொலைக்காட்சிகளும் இந்த பாணியை பின்பற்றி வருகிறார்கள்.
இந்நிலையில் ‘காற்றின் மொழி’ என்ற பெயரில் விஜய் டி.வி-யின் புதிய சீரியல் ஒளிபரப்பாகவிருக்கிறது. ஆனால் இதன் தேதி இன்னும் குறிப்பிடப்படவில்லை. இந்த சீரியலில் ‘ராஜா ராணி’ சீரியலில் கார்த்திக் கதாபாத்திரத்தில் நடித்த சஞ்சீவ் தான் ஹீரோவாக நடிக்கிறார். திரும்பவும் ஆல்யா மானசா தான் இவருக்கு ஜோடியா என்றால், இல்லை. ராஜா ராணி சீரியலில் கார்த்திக் செம்பா ஜோடி ரசிகர்களுக்கு பிடித்த முக்கிய ஜோடி. உண்மையை சொல்ல வேண்டுமெனில் கார்த்திக்கிற்கு பெண் ரசிகைகள் கிடையாது. ஆனால் செம்பாவிற்கோ ஆண்கள் மத்தியில் அப்படியொரு வரவேற்பு.
சீரியல் நடிப்புடன் அவ்வப்போது தான் நடனமாடும் வீடியோக்களை இணையத்தில் உலவ விட்டு, அதன் மூலமும் நிறைய ரசிகர்களைப் பெற்றார் செம்பா எனும் மானசா. அதுமட்டுமில்லாமல் சென்னையில் 3 நடன வகுப்புகளையும் நடத்தி வருகிறார். இதற்கிடையே சஞ்சீவும் ஆல்யாவும் காதலித்து இப்போது நிஜ வாழ்க்கையிலும் இணைந்து விட்டார்கள். சரி அது இருக்கட்டும்.
காற்றின் மொழி சீரியலைப் பொறுத்த வரைக்கும், அமெரிக்க ரிட்டர்னாக சஞ்சீவ் நடிக்கிறார். நாயகிக்கு, பெண்ணாகப் பிறந்து விட்டதால் அலட்சியப் படுத்தும் அப்பாவை நினைத்து ஏங்கும் கதாபாத்திரம். மகளை அப்பாவுடன் சேர்த்து வைத்து விட்டு, அவளையே கரம் பிடிப்பாரா நாயகன்? பொறுத்திருந்து பார்ப்போம்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijay tv katrin mozhi serial promo