விஜய் டி.வி.யின் புதிய சீரியல் ‘நினைக்கத் தெரிந்த மனமே’

திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் ‘நினைக்கத் தெரிந்த மனமே’ சீரியல், டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

விஜய் டி.வி.யில், ‘நினைக்கத் தெரிந்த மனமே’ என்ற புது சீரியல் ஒளிபரப்பாக இருக்கிறது.

சீரியலின் ஹீரோயின் தீபாவுக்கு, ஒரு விபத்தில் தலையில் அடிபட்டு நினைவு போய்விடுகிறது. வசதியும், அன்பும் கொண்ட கணவர் மற்றும் குடும்பத்துடன் வாழ்ந்து வந்தாலும், தன்னுடைய கடந்த காலம் பற்றியும், தான் யார் என்பது பற்றியும் நினைவில் இல்லாமல் இருப்பது உறுத்தலாக இருக்கிறது.

சில காட்சிகள் தீபாவின் நினைவில் வந்து போகும்போது, அவருக்குப் பதட்டமாகிவிடுகிறது. அதைத் தவிர்த்துப் பார்த்தால், தன்னுடைய வாழ்க்கையை சந்தோஷமாகவே வாழ்கிறார் தீபா. ஆனால், அது வெகுநாட்கள் நீடிக்கவில்லை. ஒருநாள் எல்லாமே தலைகீழாக மாறிவிடுகிறது. அவள் உண்மை என நினைத்த வாழ்க்கை, பொய்யாக மாறி அவளைத் துன்புறுத்துகிறது.

உண்மையில் தீபா யார்? அவருடைய உண்மையான குடும்பம் இதுதானா? அவர் கடந்த கால வாழ்க்கை எது? என்பதுதான் இந்த சீரியலின் கதை. தீபாவாக, கன்னட சீரியல்களில் புகழ்பெற்ற ஐஸ்வர்யா நடிக்கிறார். அவருடைய கணவர் அரவிந்தாக, ‘ரெட்டைவால் குருவி’ புகழ் அஸ்வின் நடிக்கிறார். பிரபல நடிகை உமா ரியாஸ், இந்த சீரியலில் முக்கிய கேரக்டரில் நடிக்கிறார்.

இந்த சீரியலை அழகர் இயக்கியுள்ளார். திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9.30 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியல், டிசம்பர் 25ஆம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close