Advertisment

ராஜா ராணி சீரியல் மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை? அப்படி என்ன நடந்துச்சு?

தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அளவுக்கு ராஜா ராணி சீரியலில் அப்படி என்ன நடந்தது?

author-image
WebDesk
New Update
விஜய் டிவி, ராஜா ராணி, raja rani, vijay tv

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ராஜா ராணி சீரியலில் இடம்பெற்ற வசனங்களால் நெட்டிசன்கள் அந்த சீரியல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுப்பியதால் சர்ச்சையாகியுள்ளது. ஒரு பொழுதுபோக்கு சீரியல் வசனத்துக்காக தேர்தல் ஆணையத்தை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் அளவுக்கு அந்த சீரியலில் அப்படி என்ன நடந்தது என்று தெரிந்துகொள்ள ரசிகர்கள் பலரும் தேடி விவாதித்து வருகின்றனர்.

Advertisment

விஜய் டிவி திரைப்படங்களின் பெயர்களில் சீரியல்களை ஒளிபரப்புவதில் முதலிடத்தில் இருக்கிறது. இதுவரை விஜய் டிவியில், வேலைக்காரன், பகல்நிலவு, செந்தூரப்பூவே, கடைக்குட்டி சிங்கம் ஈரமான ரோஜாவே, நாம் இருவர் சிங்கம் என்ப சினிமா படங்களின் பெயர்களில் சீரியல்கள் வந்துள்ளன.

அந்த வரிசையில், நடிகர் சஞ்சீவ் நடிகை ஆல்யா மானசா ஜோடியாக நடித்த ராஜா ராணி சீரியல் ரசிகர்கள் இடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்த சீரியலில் ஜோடிய நடித்த இருவரும் நிஜ வாழ்க்கையிலும் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். ராஜா ராணி சீரியல் கடந்த ஆண்டு நிறைவைடந்தது.

திருமணம் செய்துகொண்ட சஞ்சீவ் - ஆல்யா மானசா ஜோடிக்கு ஒரு பெண்குழந்தையும் பிறந்தது. ராஜா ராணி சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் அந்த சீரியலின் 2வது பாகம் தொடங்கப்பட்டது.

ராஜா ராணி முதல் பாகத்தில் நடித்த சஞ்சீவ் விஜய் டிவியில் காற்றின் மொழி என்ற சீரியலில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த சீரியல் ரசிகர்கள் இடையே வரவேற்பை பெற்றது.

திருமணம், பிரசவம் முடிந்த பிறகு, ஆல்யா மானசா ராஜா ராணி சீரியல் 2வது பாகத்தில் ஹீரோயினாக நடித்துவருகிறார். ஆல்யாவுக்கு ஜோடியாக ‘திருமணம்’ சீரியலில் நடித்த சித்து நடித்து வருகிறார். இந்த சீரியல் முதலில் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்த்த அளவு வரவேற்பைப் பெறவில்லை என்றாலும் ஆல்யா மானசாவுக்காக அந்த சீரியல் பேசப்பட்டு வந்தது.

தற்போது இந்த சீரியல் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

இந்த நிலையில்தான் ராஜா ராணி 2 சீரியலில் நேற்று (ஜனவரி 8) ஒளிபரப்பான எபிசோடில் இடம்பெற்ற வசனங்களும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அதோடு, பலரும் ராஜா சீரியல் மீதும் குழுவினர் மீதும் தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் நெட்டிசன்கள் சமூக ஊடகங்களில் குரல் எழுப்பி சர்ச்சையை எழுப்பினர்.

தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குரல் கொடுக்கும் அளவுக்கு ராஜா ராணி சீரியலில் அப்படி என்ன ஒளிபரப்பானது என்றால், தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்த மருமகள் ஆல்யா மானசாவை மாமியார் திட்டுவது போல இடம்பெற்ற காட்சிதான் காரணமாக அமைந்துள்ளது.

ராஜா ராணி சீரியலில் மாமியார் மருமகளைக் கண்டித்து, “எங்க வீட்டில் யாரும் ஒட்டு போட மாட்டோம். அதற்கு நீ மன்னிப்பு கேள். ஒட்டு போட்டதற்கு நீ தண்டனை அனுபவிக்க வேண்டும்” என்று கூறுவதாக அமைந்துள்ளது.

இதனை குறிப்பிட்டு நெட்டிசன்கள் பலரும் ஒட்டு போடுவது தப்பு என்று சொல்வது சட்ட விரோதம் இல்லையா இதனால் இந்த சீரியல் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஊடகங்களில் குரல் எழுப்பி சர்ச்சையைக் கிளப்பினர்.

அதனால், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, இந்த சீரியல் தயாரிப்பு குழுவினர் அடுத்து வரும் எபிசோடில் தேர்தலில் ஓட்டு போடுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி வசனங்களையும் காட்சிகளையும் அமைப்பார்கள் என்று நெட்டிசன்கள் கூறுகின்றனர்.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vijay Tv Tv Serial
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment