scorecardresearch

Vijay TV Serial: மாமியார் வைத்த பரீட்சையில் சந்தியாவுக்கு ரிசல்ட் வந்தாச்சு!

Raja Rani 2 Serial: சந்தியாவின் அண்ணன் மணி, “இல்லை மாமா, எங்களாலயும் சந்தியாவாலயும் இந்த குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாது. அதனால், சந்தியாவை எங்க கூடவே கூட்டிட்டு போயிடலாம்னு வந்திருக்கிறோம்” என்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான்.

raja rani 2 serial, raja rani 2, vijay tv, raja rani 2 serial today episode, ராஜா ராணி 2, ராஜா ராணி 2 சீரியல், சந்தியா, சரவணன், சிவகாமி, sandhya, saravanan, sivagami, raja rani 2 today episode story

Raja Rani 2 Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் ராஜா ராணி 2 சீரியல் விறுவிறுப்பான திருப்பங்களுடன் பரப்பான கட்டங்களை சந்தித்துவருகிறது. இன்றைய எபிசோடில் நடக்கும் நிகழ்வுகளை சுவாரஸ்யம் குறையாமல் இங்கே காணலாம்.

ராஜா ராணி 2 சீரியலில் இன்று சந்தியா இந்த குடும்பத்துக்கு ஏத்த நல்ல மருமகளா என்பதை நிரூபிப்பதற்காக மாமியார் சிவகாமி கொடுத்த 3 மாதம் கெடு இன்றுடன் முடிகிறது. நல்ல மருமகளா சந்தியா என மாமியார் சிவகாமி வைத்த பரீட்சையில் இன்று ரிசல்ட் சொல்ல வேண்டிய கட்டம். அதனால், மாமியார் என்ன சொல்வார்களோ என்ற கலக்கத்தில், அவர்கள் வீட்டைவிட்டு போகச் சொல்வதற்கு முன்பு நாம் தயாராகிவிட வேண்டும் என்று சந்தியா துணி மணி பைகளுடன் ரெடியாகி வந்து நிற்கிறாள்.

ஆனால், ரிசல்ட் சொல்ல வேண்டிய மாமியார் சிவகாமி காலையில் நடு முற்றத்தில் சாமி கும்பிட்டுக்கொண்டிருக்கிறார். அப்போது, சந்தியா தனது மாமியாரிடம் அத்தை நீங்க என்ன முடிவெடுத்திருக்கீங்களோ நான் அதற்கு கட்டுப்படறேன். கையில பேக்கோட வந்துட்டேன். சொல்லுங்க அத்தை என்று கேட்கிறாள். ஆனால், சிவகாமி, பதிலளிக்காமல் தனது மகள் பார்வதியைக் கூப்பீட்டு சஷ்டி கவசம் படித்து பூஜை செய்ய வேண்டும் என்று சொல்லிவிட்டு பூஜைக்கு செல்கிறார்.

இதைக்கேட்ட, அர்ச்சனா, என்ன இவங்க சட்டுனு ரிசல்ட் சொல்வாங்கனு பார்த்தா அமைதியா இருக்காங்க.. பெரிய எலக்‌ஷன் ரில்ட்டாட்டம் பில்டப் பண்றாங்க என்று மனதுக்குள் நினைக்கிறாள்.

ஹாலில் அமர்ந்திருக்கும் சந்தியாவின் மாமனார், சந்தியாவை அழைத்து, உன்னை யாருமா அதுக்குள்ள பையெல்லாம் தூக்கிட்டு வரச்சொன்னா, நீ மொதல்ல உள்ள போ, என்னமா தயங்குறா, நான் சொல்றதுல உனக்கு நம்பிக்கை இல்லையா, சிவகாமிதான் முடிவை சொல்லல இல்லை. அதனால், இப்போதைக்கு நீ இந்த வீட்டு மருமகள் தான், அந்த உரிமையில் கேட்கிறேன். போமா…” என்று கூறுகிறார். சந்தியாவும் டீ போட சமையலறைக்கு செல்கிறாள்.

வாசற்படியில் நிற்கும் சரவணனை அப்பா வா வந்து உட்கார் என்று அழைக்கிறார். ஆனால், சரவணன், பரவாயில்லைப்பா என்று என்ன நடக்குமோ என்ற கவலையில் அங்கேயே நிற்கிறான்.

சமையலறைக்குப் போன சந்தியா, டீ போட டீ தூள் எடுக்கிறாள். அப்போது அங்கே உள்ளே இருக்கும் அர்ச்சனா, என்ன சந்தியா என்று கேட்கிறாள். அதற்கு சந்தியா மாமா டீ போட சொன்னாங்க என்று கூற, அதற்கு அர்ச்சனா, நான் டீ போடறேன் என்று கூறுகிறாள். பிறகு அவளே, இல்லை நீயே போடு. ஏன்னா அத்தை உன்னை போகச்சொல்லிவிட்டால் மாமா கடைசியா உன் கையால ஒரு டீ கூட குடிக்க முடியவில்லை என்று வருத்தப்படுவார். இன்னும் கொஞ்சம் நேரத்தில் அத்தை முடிவை சொல்லிடுவாங்க இல்ல என்று வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவதுபோல சொல்லிவிட்டு செல்கிறாள். அர்ச்சனா சொல்லியதைக் கேட்டு வருத்தத்துடன் சந்தியா டீ போடுகிறாள்.

அந்த நேரம் பார்த்து, சந்தியாவின் அண்ணன் மணியும் அவனுடைய மனைவியும் வீட்டுக்கு வருகிறார்கள். அப்பா வரவேற்கிறார். வந்தவர்களை அமர வைக்கிறார். அப்போது சந்தியா டீ போட்டு எடுத்துக்கொண்டு வந்து மாமனாருக்கு தருகிறாள்.

சரவணனின் அப்பா, மணியிடம் என்னப்பா ஊருக்கு போக தயாராகிட்டீங்கனு கேள்விப்பட்டேன். சொல்லிவிட்டு போக வந்தீங்களா என்று கேட்டார். ஆனால், சந்தியாவின் அண்ணன் மணி, “ஆமாம், மாமா, சந்தியாவுக்கு மறுபடியும் மறுபடியும் எங்களால ஏதாவடு ஒரு பிரச்னை வந்துகிட்டே இருக்குது. நாங்க ஏதாவது கேட்டால், இது எங்க குடும்ப பிரச்னை, எங்க குடும்பம்னு சொல்லி எங்க வாயை அடைச்சிடுறா, அவளுக்கு நடக்குதோ இல்லை இந்த குடும்பத்துக்கு நடக்குதோ, எல்லாமே எங்களாலதான், என்னாலதான். தயவு செய்து என்னை மன்னிச்சிடுங்க, என்னை மன்னிச்சிடுங்க மாப்பிள்ளை” என்று கெட்கிறான். இதைக்கேட்ட சரவணனின் அப்பா, “நீங்க பண்ணது ரொம்ப தப்பு தம்பி, ஆனால், சந்தியா மாதிரி ஒரு பொண்ணை எங்க குடும்பத்துக்கு கொடுத்த ஒரே காரணத்துகாக, அதை நாங்க மறந்துடலாம்.” என்று கூறுகிறார்.

அப்போது, குறுக்கிடும் சரவணனின் சின்ன தம்பி, “நீங்க மறந்து மன்னிச்சு என்ன ஆகப்போகுது, அம்மாதான எல்லாத்தையும் முடிவு செய்ய வேண்டும்” என்று கூறுகிறான்.

இதனிடையே, சந்தியாவின் அண்ணி, “உன்னோட திங்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டயா?” என்று கேட்கிறாள். இதற்கு சந்தியாவின் அண்ணன் மணி, “இல்லை மாமா, எங்களாலயும் சந்தியாவாலயும் இந்த குடும்பத்துக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாது. அதனால், சந்தியாவை எங்க கூடவே கூட்டிட்டு போயிடலாம்னு வந்திருக்கிறோம்” என்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறான். இதைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். இதனிடையே, அர்ச்சனா, அனைவருக்கும் டீ கொண்டுவந்து தருகிறாள்.

சரவணனின் அப்பா, “இங்க என்ன நடக்குது, என்ன பேசறீங்கனு எனக்கு புரியல, சிவகாமி இன்னும் முடிவை சொல்லல, அதுக்குள்ள இப்படி பேசுனா எப்படி, ஏம்மா சந்தியா நீயாவது சொல்லும்மா, சரவணா இங்க என்னடா நடக்குது” என்று கேட்கிறார். அதற்கு சரவணன், இதுக்குமேல நான் என்னப்பா சொல்றது, அவங்களுக்கு என்ன விருப்பமோ அதையே செய்யட்டும் என்று தழுதழுத்த குரலில் சொல்கிறான்.

இதைக் கேட்டு அப்பா, என்னடா நீ இப்படி பேசுற, அந்த முடிவை சிவகாமி வந்து சொல்லட்டுமா? அதுவரைக்கும் இங்கே இருக்கட்டுமே என்று கேட்கிறார். அப்போது இடையில் பேசும் அர்ச்சனா, அது எப்படி இருக்க முடியும் மாமா,ஏற்கெனவே, போகனும்னு முடிவெடுத்துவிட்ட பிறகு, அதற்குப் பிறகு, அவங்களை கட்டாயப்படுத்தி இருக்க வைக்கிற மாதிரிதான ஆகும்” என்று கூறுகிறாள். இதைக்கேட்டு கோபமடையும் சரவணனின் அப்பா, யாரும் எதுவும் சொல்ல வேண்டாம், சிவகாமி வந்து முடிவை சொல்லட்டு, அவ வரட்டு எதுவா இருந்தாலும் அப்பறம் பேசிக்கலாம் என்று அர்ச்சனாவை அமைதியாக இருக்கச் சொல்கிறார்.

பார்வதி அனைவருக்கும் கற்பூர தீபத்தை வணங்க காட்டுகிறாள். சிவகாமியும் பூஜையை முடித்துவிட்டு அங்கே வருகிறார். அவரிடம் சந்தியாவின் அண்ணன் மணி, அத்தை உங்க முடிவுக்காகத்தான் நாங்க காத்துக்கிட்டு இருக்கிறோம். நீங்க அனுமதி கொடுத்தா சந்தியாவை நாங்க கூட்டிகிட்டு போகிறோம்.” என்று கேட்கிறான்.

அதற்கு சிவகாமி, “யாரும் காத்துக்கிட்டு இருக்கிற மாதிரியே தெரியலையே, இதோ ஏற்கெனவே இவள் பையை தூக்கிட்டு வந்துட்டா, நீங்க வெளியூர் போகிற மாதிரி கிளம்பி வந்திருக்கீங்க… எல்லா முடிவும் ஏற்கெனவே எடுத்திருக்கிற மாதிரிதான் தெரியுது.” என்று கூறுகிறாள்.

அதற்கு சிவகாமியின் கணவர், “அவங்களை விடும்மா, உன் முடிவை நீ சொல்லு” என்று கேட்கிறார். அதற்கு சிவகாமி, இதுக்குமேல நான் சொல்வதற்கு என்னங்க இருக்கு, சந்தியாவோட ஆசை கிளம்பி போறதுதான்னா அதை யாரால தடுக்க முடியும். அவளுடைய அண்ணன் அண்ணியோட விருப்பம், இவளைக்கூட்டிட்டு போறதுதான்னா அதை எப்படி என்னால நிறுத்த முடியும்” என்று கேட்கிறார். அப்போது மணி, சந்தியா வா போகலாம், இதுக்கு மேல இங்க யாருக்கும் எந்த சங்கடத்தையும் கொடுக்க வேணாம் என்று கூப்பிடுகிறான். எல்லோரும் அதிர்ச்சியடைந்து நிற்கிறார்கள்.

அப்போது சிவகாமி, “ஒரு நிமிஷம் நான் சொல்றதை முழுசா கேட்டுட்டு கூட்டிட்டு போங்க, உங்க தங்கச்சிக்கு நான் ஒரு பரீட்சை வச்சேன். அதுல அவ பாஸ் ஆகலனா, இங்க இருந்து அனுப்பிடுவேன்னு சொன்னேன். சரியா, ஆனால், நான் இப்ப சொல்றதுக்கே எதுவுமே இல்லை. நான் அனுமதி கொடுக்கிறதுக்கும் எதுவுமே இல்லை.” என்று கூறுகிறார். அப்போது அவருடைய கணவர் நீ என்ன சொல்ல விரும்புகிற என்ற தொணியில் சிவகாமி? என்று கேட்கிறார்.

அதற்கு, சிவகாமி, “ஆமாங்க, இவ இந்த பரீட்சையில ஜெயிச்சிட்டா,” என்று கூறுகிறார். இதைக்கேட்டு வீட்டில் எல்லோரும் மகிழ்ச்சியடைகிறாள். ஆனால், அர்ச்சனா அதிர்ச்சியடைகிறாள்.

இவள் இந்த பரீட்சையில் பாஸாயிட்டான்னு எல்லோருக்குமே இங்க எல்லோருக்கும் தெரியும். அதற்கு அப்புறமும் நான் இவளை வெளியிடல் போனு நான் சொல்ல முடியாது. நான் சொல்லவும் மாட்டேன். நான் கொடுத்த சத்தியத்தை மீறவும் மாட்டேன்.” என்று கூறுகிறார்.

இதைக்கேட்டு அர்ச்சனா, “ஐயய்யோ என்னடா இது இந்த அத்தை இப்படி குண்டை தூக்கிப்போடுறாங்க” என்று மனதுக்குள் புலம்புகிறாள். சிவகாமியின் கணவர், “நீ இப்படிதான் சொல்வனு எனக்கு தெரியும் சிவகாமி” என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசும் சிவகாமி, “இந்த பரீட்சையில் ஜெயிக்கனும்னுதான், இவ இவ்வளவு நாள் இங்க இருந்தாள், இதற்கு பிறகும் இவள் இங்க இருக்கனுமா வேண்டமா என்பதை முடிவெடுக்க வேண்டிய முழு உரிமை சந்தியாவுக்குதான் இருக்கிறது… சொல்லு சந்தியா, நீ இங்க இருக்கியா, இல்லை உன் அண்ணன்கூட போகப் போறீயா, எதுவா இருந்தாலும் உன் இஷ்டம்” என்று கூறுகிறார்.

இதைக்கேட்டு சந்தியா சந்தோஷத்தில் கண்ணீருடன் தனது தோழி சொன்னதை நினைத்துப் பார்க்கிறாள். “வெளியில வா, தப்பான பாதையை செலக்ட் பண்ணிட்டோம்னு கடைசி வரைக்கும் அதுலயே போகனும்னு அவசியமில்லை” என்று கூறியதை நினைத்துப் பார்க்கிறாள். சரவணனை திரும்பி பார்க்கிறாள். மணியும் சொல்லுமா என்று சந்தியாவிடம் கேட்கிறான்.

அப்போது, சரவணனின் அப்பா, சந்தியா இந்த பரீட்சையில் ஜெயிச்சதே சரவணனுக்காகத்தான். சொல்லுமா… அர்ச்சனா சந்தியாவுக்கும் ஒரு கைப்புடி பருப்பு போடு… என்று கூறுகிறார். மணி சந்தியா நீ எப்ப சொல்லப்போற முடிவுலதான் உன் மொத்த வாழ்க்கையும் இருக்கிறது என்று கூறுகிறார். இதையெல்லாம் கேட்ட சந்தியா, மெல்ல மாமியார் சிவகாமி அருகே நடந்து சென்று தழுத்தழுத்த குரலில் என்னை மன்னிச்சிடுங்க அத்தை… எனக்கு நீங்க மறுவாழ்வு கொடுத்திருக்கீங்க… நீங்க வச்ச பரீட்சையில் நிறைய தப்பு பண்ணியிருக்கேன். ஆனாலும் நீ ஜெயிச்சிட்டனு சொன்ன வார்த்தை எனக்கு சந்தோஷமா இருக்கு அத்தை. எப்படி இருந்தாலும் உங்களுக்கு புடிச்ச மருமகளா இருபேன் என்ற நம்பிக்கை இருக்கு… ரொம்ப நன்றி அத்தை..” என்று காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்குகிறாள். சிவகாமியும் தனது மருமகள் சந்தியாவை தூக்கி விடுகிறாள்.

சரவணனின் அப்பா, “அப்புறம் என்ன மணி சந்தியா நான் இங்கதான் இருப்பேன், நீங்க போயிட்டு வாங்கனு சொல்றா” என்று சிரித்துக்கொண்டே சொல்கிறாள். அப்போது, சந்தியா, ஆமாம் அண்ணன், அத்தை வச்ச பரீட்சையில் மட்டும் நான் பாஸாகல, இதுதான் என் குடும்பம், இவங்க என்னை பார்த்துப்பாங்கனு நான் சொன்னதை இன்னை நான் நிரூபிச்சிருக்கேன். நான் இங்கதான் இருக்கனும். இங்கதான் இருப்பேன். இந்த குடும்பம்தான் எப்போதும் என் குடும்பம் என்று சொல்கிறாள்.

இதைக் கேட்டு அனைவரும் சந்தோஷப்படுகிறார்கள். சிவகாமியும் இதை ஆமோதிக்கிறார். அப்போது அப்பா, சரவணனைக் கூப்பிட்டு இந்த சந்தோஷத்தை கொண்டாடனும்… கடைக்குப் போயி நல்ல குரும்ப ஆடா வாங்கி அடிச்சுப் போடலாம். இன்னைக்கு பிரியாணிதான் எல்லோருக்கும் என்று கூறுகிறார். எல்லோரும் சிரிக்கிறார்கள். சந்தோஷத்துடன் தனது பெட்ரூமுக்குள் செல்லும் சந்தியா, மாமியார் சிவகாமி தன்னை பரீட்சையில் ஜெயிச்சிட்டானு சொன்னதை நினைத்து சந்தோஷத்துடன் சொல்கிறாள்.

பிறகு, சந்தியா பீரோவைத் திறந்து தனது அப்பா அம்மா புகைப்படத்தை எடுத்து வைத்துக்கொண்டு தான் ஜெயித்துவிட்டதை சொல்கிறாள். இப்படியெல்லாம் என் வாழ்க்கை இருக்கும்னு உங்களுக்கு முன்னாடியே தெரியுமாப்பா, அதனாலதான் எப்பவும் உறுதியோட போராடனும்னு எனக்கு சொல்லிக்கொடுத்தீங்களா? நான் போராடனேம்பா விட்டுக்கொடுக்காமல், யாரையும் கஷ்டப்படுத்தாமால், என் எடத்துல ஸ்ட்ராங்கா நின்னு போராடினேம்பா, நான் ஜெயிச்சிட்டேன். அத்தை என்னை ஏத்துக்கிட்டாங்க, அம்மா நான் பாஸாகிட்டேன். நீங்க என்கூட இங்கதான் இருப்பீங்கனு தெரியும். சந்தோஷமா இருக்கிறீங்களா? இல்லப்பா நீங்க முழுசா சந்தோஷமா இருக்க மாட்டீங்கனு தெரியும். என் கனவு உங்க கனவு அது நிறைவேறுகிறவரை சந்தோஷமா இருக்க மாட்டீங்க… நல்ல மருமகள்னு பேர் வாங்க நான் எவ்ளோ உறுதியா போராடினேனோ, அதே மாதிரி உறுதியா இருந்து நான் ஐபிஎஸ் ஆவேன்பா, உங்க கனவை நான் நிச்சயமா நிறைவேத்துவேன்பா” என்று கூறுகிறாள். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. சந்தியா ஐபிஎஸ் ஆவாளா என்பதை இனிவரும் எபிசோடுகளில் தெரிந்துகொள்ளலாம்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vijay tv raja rani 2 serial today episode mother in law sivagami accepted sandhya as her daughter in law