ராஜா ராணி புகழ் ஆல்யா மானசா மீண்டும் கர்ப்பமாகி உள்ளதால், அவர் சீரியலில் இருந்து விலகுகிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் ராஜா ராணி 2 சீரியலுக்கு ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு முக்கிய காரணம் இந்த சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் ஆல்யா மானசா.
ராஜா ராணி சீரியலின் முதல் சீசன் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் தான் நடிகை ஆல்யா மானசா.
ராஜா ராணி தொடரில் நடிப்பதற்கு முன்பாகவே ஆல்யா மானசா கலைஞர்
ஆல்யா, ராஜா ராணி சீரியலில் தனக்கு ஜோடியாக நடித்து வந்த சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஐலா என்ற ஒரு பெண் குழந்தையும் பிறந்தது.
சமூகவலைதளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் இந்த ஜோடி தற்போது ‘சஞ்ஜீவ் ஆல்யா’ என்ற யூ டியூப் சேனலை நடத்தி வருகின்றனர். முதன்முறை கர்ப்பமாக இருந்தபோது, சீரியலில் நடிப்பதிலிருந்து விலகியிருந்த ஆல்யா, குழந்தை பிறந்து ஒரு வருடம் கழித்து மீண்டும் சீரியலில் நடிக்க ஆரம்பித்தார்.
தற்போது ஆல்யா ராஜா ராணி-2 சீரியலில் நடித்து வருகிறார். ஆல்யா, இந்த சீரியலில் சித்துவுக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த நிலையில், கடந்த மாதம் ஆல்யாவின் கணவர் சஞ்சீவ், தனது மனைவி மீண்டும் கர்ப்பமாக உள்ளதாக அறிவித்திருந்தார். இருப்பினும், ஆல்யா இதனை உறுதிப்படுத்தவில்லை.
இந்த நிலையில், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஆல்யா அவ்வப்போது புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். அதேபோல இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் ரசிகர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்து வருகிறார். அந்த வகையில், சமீபத்தில் ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்து வந்த ஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் நீங்கள் கர்ப்பமாக உள்ளீர்களா? என கேட்டுள்ளார். அதற்கு சிரித்தபடி மகிழ்ச்சியுடன் தலையாட்டி, தான் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்துள்ளார். இதனைத் தொடர்ந்து ரசிகர்கள் அனைவரும் ஆல்யாவுக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
தற்போது, ஆல்யா மீண்டும் கர்ப்பமாக உள்ளதால், அவர் தற்போது நடித்து வரும் ராஜா ராணி -2 சீரியலில் இருந்து விலகுவாரா அல்லது ஆல்யா கதாப்பாத்திரம் இல்லாமல் கதையை நகர்த்தப்போகிறார்களா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil