/tamil-ie/media/media_files/uploads/2022/07/Vijay-TV.jpg)
ராஜு வூட்ல அமலா பால் டான்ஸ்: வெற்றி ரகசியத்தை விஜய் டி.வி-கிட்ட தெரிஞ்சுக்கோங்க!
விஜய் டிவியின் ராஜூ வுட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி காமெடி கலக்கலின் உச்சக்கட்டமாக சென்றுகொண்டிருக்கிறது.
/tamil-ie/media/media_files/uploads/2022/07/Vijay-TV.jpg)
Advertisment
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி பார்க்கும் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறிவிட்டது இன்றைய தொலைக்காட்சி நிகழ்ச்சிகள். வார நாட்களில் சீரியலும் வார இறுதியில் ரியாலிட்டி ஷோக்களும் ரசிகர்கள் மத்தியில் ஈர்ப்பை ஏற்படுத்தி வருகிறது. தமிழில் சில முக்கிய சேனல்களில் இந்த பாணி அதிகம் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
90-களில் இறுதியில் தொடங்கப்பட்ட இந்த தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஆரம்பத்தில் ஒரு சில சீரியல்கள் மட்டுமே ஒளிபரப்பாகி வந்தது. சீரியல் படங்கள் என சமமாக ஒளிபரப்பி வந்த சேனல்கள் தற்போது தங்களது முழு கவனத்தையும் சீரியல் மற்றும் ரியாலிட்டி ஷோக்கள் பக்கம் திருப்பியுள்ளனர்.
இதில் சீரியலுக்கு விதை போட்டது சன் டி.வி என்றால் ரியாலிட்டி ஷோக்களுக்கு ஆரம்ப புள்ளி விஜய் டிவி. 90-களின் நடுப்பகுதியில் தொடங்கப்பட் விஜய் டிவியில் பல வித்தியாசமான ரியாலிட்டி ஷோக்கள் அரங்கேறி வருகிறது. இதில் முக்கியமாக, கலக்கப்போவது யாரு, அது இது எது, லொள்ளு சபா, சூப்பர் சிங்கர், ஸ்டார்ட் மியூசிக், நீயா நானா? என பல ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
இதே பாணியில் மற்ற சேனல்களும் தங்களது ரியாலிட்டி ஷோக்களை வடிவமைத்துகொண்டன. ஆனால் எவ்வளவுதான் மற்ற சேனல்கள் விஜய் டிவி போல் ரியாலிட்டி ஷோக்களை போல் ஒளிபரப்பினாலும், வித்தியாசமாக ஷோக்களை அமைத்து பிரபலங்களை பங்கேற்க அழைத்து வந்து வெற்றி காண்பதில் விஜய் டி.விக்கு தனி இடம் உண்டு.
தற்போது 3-வது சீசனை எட்டியுள்ள குக் வித் கோமாளி நிகழ்ச்சி விஜய் டிவியின் வித்தியாசத்திற்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாக கூறலாம். அதேபோல் கடந்த பிக்பாஸ் சீசனில் சாம்பியன் பட்டம் வென்ற ராஜூ பெயரில் தொடங்கப்பட்டுள்ள ராஜூ வுட்ல பார்ட்டி என்ற நிகழ்ச்சி காமெடி கலக்கலின் உச்சக்கட்டமாக சென்றுகொண்டிருக்கிறது.
பிக்பாஸ் சாம்பியன் ராஜூ தனது டீம்முடன் சேர்ந்து செய்யும் சேட்டைகள் கெஸ்ட்டாக வரும் செலிபிரிட்டியை கலாய்ப்பது என ரசிகர்களை சிரிக்க வைக்க பல முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இதில் கடந்த எபிசோட்டில் ஈரமான ரோஜாவே கேப்ரியல்லா, பாக்கியலட்சுமி ரேஷ்மா ஆகியோர் பங்கேற்றனர். இதில் ராஜூ ரேஷ்மாவை கலாய்த்தது ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
அந்த வகையில் தற்போது ராஜூ வுட்ல பார்ட்டி நிகழ்ச்சியில் நடிகை அமலா பால் பங்கேற்றுள்ளார். இது தொடர்பான ப்ரமோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், மதுரை முத்து, முல்லை, கோதண்டம், தீபா, ஆகியோர் செய்யும் அலப்பறைகள் காமெடி கலக்கலாக உள்ளது. தற்போது இந்த ப்ரமோ வைரலாகி வருகிறது.
காமெடி கலைஞர்களை வைத்து வித்தியாசமாக நிகழ்ச்சிகளை நடத்தி அதில் சினிமா மற்றும் சீரியல் நட்சத்திரங்களை பங்கேற்க வைத்து வெற்றி காண்பதில் விஜய் டிவி கைதேர்ந்தது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.