Advertisment

டாடா பட இயக்குனரின் அடுத்த படம்... நாயகியாக விஜய் டிவி ஜோடியின் மகள்

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில், பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் நேத்திரன் - தீபா நேத்ரன் மகள் அஞ்சனா நாயகியாக அறிமுகமாகிறார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Revan

டாடா இயக்குனரின் அடுத்த படம்

கவின் நடிப்பில் வெளியாகி வெற்றிபெற்ற டாடா படத்தின் இயக்குனர் அடுத்து ரேவன் என்ற படத்தை இயக்க உள்ள நிலையில், இந்த படத்தில் விஜய் டிவி சீரியல் ஜோடியின் மகள் நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமான கவின் ஒரு சில திரைப்படங்களில் நடித்திருந்தாலும், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின் அவர் நடித்த லிப்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. அதனைத் தொடர்ந்து கணேஷ் கே பாபு இயக்கத்தில் சமீபத்தில் வெளியான டாடா படத்தில் நடித்திருந்தார். சைலண்டாக வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், கவினுக்கு பெரிய வெற்றிப்படாக அமைந்தது.

இந்த படத்திற்கு பின் கவின் அடுத்தடுத்து படங்களில் கமிட் ஆகி வரும் நிலையில், டாடா படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு தனது அடுத்த படத்தை அறிவித்துள்ளார். எம்.ஜி.ஸ்டூடியோ சார்பில் ஏபிவி மாறன் இயக்குநர்  கணேஷ் கே பாபு, திரைக்கதை எழுதி தயாரிக்க உள்ள இந்த படத்தை, இயக்குநர் கல்யாண் கே ஜெகன் இயக்க உள்ளார். இவர் இயக்குநர்  கணேஷ் கே பாபுவிடம் இணை இயக்குனராக பணியாற்றியவர். ரேவன் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் மூலம் அஜய் கார்த்தி என்ற அறிமுக நடிகர் ஹீரோவாக நடிக்கிறார்.

Dada

விஜய் டிவி சீரியல் ஸ்டார்ஸ் நேத்திரன் - தீபா

இந்த படத்தின் பூஜை இன்று எளிமையாக நடைபெற்ற நிலையில், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, எஸ்.எஸ்.லலித் குமார், ஃபைவ் ஸ்டார் கதிரேசன், ஃபைவ் ஸ்டார் செந்தில், ராக்ஃபோர்ட் என்ட்டெயின்மென்ட் முருகானந்தம்,  உள்ளிட்ட தமிழ் சினிமாவின் முக்கிய பிரமுகர்கள் பலரும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

அஜய் கார்த்திக் நாயகனாக அறிமுகமாகும் இப்படத்தில்,  பல சீரியல்களில் நடித்து பிரபலமான நடிகர் நேத்திரன் - தீபா நேத்ரன் மகள் அஞ்சனா நாயகியாக அறிமுகமாகிறார். நேத்திரன் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும், பொன்னி சீரியலிலும், தீபா முத்தழகு சீரியலிலும் நடித்து வருகின்றனர். மேலும் இந்த படத்தில், இயக்குநர் கே பாக்யராஜ், விடிவி  கணேஷ், உள்ளிட்ட பலர் முக்கியமான கேரக்டர்களில் நடிக்கிறார்கள்.

சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ரேவன் படத்தின் முழுப்படப்பிடிப்பும் நடக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் படம் பற்றிய  தகவல்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment