குழந்தைகளுடன் ஒரே வீட்டில் பாரதி- கண்ணம்மா: இது எப்போ?

Bharathi Kannamma serial’s next episode pic goes viral Tamil News: ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ள எபிசோடுகள் பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தனது 2 மகள்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay TV serial tamil news: bharathi kannamma serial’s next episode pic goes viral

Vijay TV serial news: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் முன்னணி சீரியலாக பாரதி- கண்ணம்மா வலம் வருகிறது. கடந்த இரு வாரங்களாக ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைத்து பெரும் எதிர்பார்ப்பை இந்த சீரியல் ஏற்படுத்தி வருகிறது என்றால் நிச்சம் மிகையாகாது. இதற்கு முக்கிய கரணம் ஹேமா கடத்தல், பாரதி கண்ணம்மா சந்திப்பு, பாரதி ஹேமாவுடன் அமெரிக்க பயணம் போன்ற காட்சிகளை குறிப்பிட்டு கூறலாம். இப்படி பல ட்விஸ்ட்களுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் முடிவுக்கு வர ஒரே ஒரு DNA டெஸ்ட் போதும். ஆனால் அதை வைத்து நிறைய மாதங்களாக கதையை ஓட்டிக்கொண்டு வருகிறார் இயக்குனர்.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சீரியலில் பாரதியும் கண்ணம்மாவும் ஒன்று சேர வேண்டும். மற்றும் அழகான குடும்பமாக அவர்கள் 4 பேரும் ஒரே வீட்டில் சந்தோஷமாக இருக்க வேண்டும் என்பது தான் பலரின் ஆசையாக உள்ளது. ஆனால், இது எப்போது நடக்கும் என்பது தெரியாத ஒன்றாகவே உள்ளது.

தற்போது ஹேமாவிற்காக பாரதி-கண்ணம்மா ஒன்றாக இணைந்துள்ள எபிசோடுகளே பரபரப்பின் உச்சத்தை தொட்டுள்ள நிலையில், பாரதி கண்ணம்மாவின் வீட்டில் தனது 2 மகள்களுடன் உட்கார்ந்து உணவு சாப்பிடும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படத்தை சமூக வலைதள பக்கங்களில் அதிகம் பகிர்ந்தும் வருகின்றனர்.

“தமிழ்இந்தியன்எக்ஸ்பிரஸின்அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்டெலிகிராம்ஆப்பில்பெறt.me/ietamil

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vijay tv serial tamil news bharathi kannamma serials next episode pic goes viral

Next Story
பாகுபலி பிரச்சனை… நடிகனாக இருப்பது குற்றமா?
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com