விஜயகாந்த் படத்தில் அறிமுகம்... மலையாள மெட்டி ஒலி சீரியல் ஹீரோயின்; இந்த நடிகை தெரியுதா?

விஜயகாந்த் படத்தில் நடித்த பிரபல நடிகை தற்போது என்ன செய்கிறார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

விஜயகாந்த் படத்தில் நடித்த பிரபல நடிகை தற்போது என்ன செய்கிறார் என்பது குறித்து இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

author-image
Nagalekshmi Rajasekar
New Update
kripa

விஜயகாந்த் படத்தில் அறிமுகம்... மலையாள மெட்டி ஒலி சீரியல் ஹீரோயின்; இந்த நடிகை தெரியுதா?

இயக்குநர் திருமுருகன் இயக்கத்தில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘எம்மகன்’. இந்த படத்தில் பரத், நாசர், சரண்யா, கோபிகா, வடிவேலு உட்பட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்றிருந்த காமெடிகள் அனைத்தும் இன்றும் நினைக்கும் பொழுது சிரிப்பலையை ஏற்படுத்தும்.

Advertisment

அதிலும், குழாய் அடியில் சரண்யா உருளும் காட்சி இன்றும் ரசிகர்கள் மத்தியில் நினைவிருக்கிறது. இப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் பரத்திற்கு தங்கையாக மலையாள நடிகை கிருபா நடித்திருப்பார். இதையடுத்து இவர் சூர்யா நடிப்பில் வெளியான ‘வேல்’ திரைப்படத்தில் நடித்திருந்தார்.

இந்நிலையில் நடிகை கிரிபா தனது சினிமா வாழ்க்கை குறித்து மனம் திறந்துள்ளார். அவர் பேசியதாவது, "நான் பனிரெண்டாம் வகுப்பு முடித்த பின் தான் ’எம்மகன்’ படத்தில் நடித்தேன். மலையாள ’மெட்டி ஒலி’ சீரியலில் நான் நடித்தேன். அதன் பிறகு படிப்பில் கவனம் செலுத்த ஆரம்பித்துவிட்டேன். ’எம்மகன்’ படத்தில் ஆடிஷனுக்காக கிட்டத்தட்ட 200 பேரில் இருந்து தான் நான் தேர்ந்தெடுக்கப்பட்டேன். 

கதாநாயகி ரோலில் நடிக்க வந்தேன். அதன்பின்னர் தங்கை கதாபாத்திரத்தில் நடித்தேன். ’எம் மகன்’ திரைப்படம் பெரும் வெற்றி பெற்றதுடன் எனக்கு பல வாய்ப்புகள் வந்தது.  சினிமா வாழ்க்கை குறித்து நான் தீவிரமாக இருக்கவில்லை.  இலக்கியம் மற்றும் கற்பித்தலில் ஆர்வம் இருந்ததால் அந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்தேன்.

Advertisment
Advertisements

நான் சிறுவயதில் விஜயகாந்தின் ‘கள்ளழகர்’ திரைப்படத்தில் நடித்தேன். ’எம் மகன்’ திரைப்படத்தில் மொழி ரீதியாக நடிகை சரண்யா மற்றும் நடிகர் நாசர் எனக்கு மிகவும் உதவினார்கள். நடிகர் நாசர் எனக்கு வழிகாட்டியாக இருந்தார். சரண்யா  அக்காவுடன் இன்று வரை நெருங்கிய நட்பில் இருக்கிறேன்” என்றார்.

Cinema

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: