ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த மெர்சல் படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. அட்லீ இயக்கத்தில் விஜய், சமந்தா, நித்யா மேனன், காஜல் அகல்வால், வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்த மெர்சல் திரைப்படம் தீபாவளி பண்டிகையையொட்டி வெளிவரவுள்ளது. முன்னதாக விஜய் பிறந்தநாளான ஜூன் 22-ம் தேதி மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது. இந்த நிலையில், மெர்சல் படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது.