பொதுவாகவே தென்னிந்திய சினிமாவில் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிப் படங்களுக்கு இடையே தான் போட்டி இருக்கும். அதுவும் 'பாகுபலி' படத்திற்கு பிறகு, தெலுங்கு திரையுலகம் மிகவும் கவனிக்கப்படும் இண்டஸ்ட்ரியாக உருவெடுத்துள்ளது. பாகுபலியின் இரண்டாம் பாகம் 1500-க்கும் அதிகமான கோடியை வசூலித்து உலக சினிமா மார்க்கெட்டின் டாப் வசூல் படங்களின் லிஸ்டில் நுழைய இந்திய படங்களாலும் போட்டி போட முடியும் என்பதை நிரூபித்துக் காட்டியது. இதனால், தமிழ் சினிமாவான கோலிவுட் இண்டஸ்ட்ரிக்கு டஃப் பைட் கொடுத்துள்ளது தெலுங்கு சினிமாவான டோலிவுட்.
குறிப்பாக கோலிவுட்டின் டாப் ஹீரோக்களான அஜித், விஜய்க்கு இணையான உலக மார்க்கெட், டோலிவுட் டாப் ஹீரோக்களான பவன் கல்யாண், மகேஷ் பாபுவிற்கும் உள்ளது. அதிலும், மகேஷ் பாபுவிற்கு அமெரிக்கா, ஃபிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகளில் வாழும் இந்தியர்கள் மத்தியில் தமிழ் நடிகர்களை காட்டிலும் அதிக ரசிக பட்டாளம் உண்டு. இதற்கு ஒரு முக்கிய காரணமும் இருக்கிறது.
பொதுவாக ஆந்திரா, தெலங்கானா மாநிலத்தைச் சேர்ந்தவர்களில் மூன்றில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்தவராவது அமெரிக்காவில் செட்டிலானவராக இருப்பார். 'எங்கள் பையன் அமெரிக்காவில் பணிபுரிகிறான்' என்பதையே மிடில் கிளாஸ் முதல் பணக்கார குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் சொல்ல விரும்புவார்கள். அரசுப் பணி கிடைப்பதைக் காட்டிலும், அமெரிக்கா செல்வதையே அவர்கள் விரும்புவார்கள். அந்தளவிற்கு வெளிநாட்டு மோகம் கொண்டவர்கள் தெலுங்கர்கள்.
ஆனால், நம் தமிழகத்தில் அவர்களை கம்பேர் செய்யும் போது வெளிநாட்டு மோக எண்ணிக்கை குறைவு தான். இதனால் தான் வெளிநாடுகளில் தெலுங்கு ஹீரோக்களுக்கு அதிக ரெஸ்பான்ஸ் கிடைக்கிறது.
நிலைமை இப்படியிருக்க, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் மகேஷ் பாபு நடித்துள்ள 'ஸ்பைடர்' படம் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் பைலிங்குவலாக எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு காட்சியை மட்டுமில்லாது, ஒவ்வொரு ஃபிரேமையும் தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் மிகவும் சிரத்தையெடுத்து ஷூட் செய்துள்ளனர். 'இனிமேல் இந்தளவிற்கு நான் எந்த படத்திற்காகவும் கஷ்டப்பட மாட்டேன்' என பாடல் வெளியீட்டு விழாவில் முருகதாஸே சொல்லும் அளவிற்கு அனைவரும் கடுமையாக உழைத்துள்ளனர். இதனால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு தாறுமாறாக ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் எகிறியுள்ளது.
இந்த நிலையில் இப்படத்தின் டிரைலர், தமிழ், தெலுங்கு என இரு மொழிகளிலும் கடந்த செப்டம்பர் 14-ஆம் தேதி வெளியானது. இன்று வரை(8 நாட்கள்) இதன் தெலுங்கு டிரைலருக்கு 169k லைக்ஸ் கிடைத்துள்ளது. 8,193,370 பேர் இதனை பார்த்துள்ளனர்.
https://www.youtube.com/embed/og1zP3u0b4k
அதேசமயம், அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள மெர்சல் படத்தின் டீசர் நேற்று(செப்.,21) மாலை 6 மணிக்கு தான் வெளியானது. ஆனால், இப்படத்திற்கு கிடைத்துள்ள லைக்ஸ் எவ்வளவு தெரியுமா? 750k.... வியூஸின் மொத்த எண்ணிக்கை 12,447,089.
https://www.youtube.com/embed/gQDo5QuZTaw
மகேஷ் பாபு, விஜய் இருவரும் சம பலம் வாய்ந்த ரசிகர் பட்டாளம் கொண்டிருந்தாலும், விஜய் படத்திற்கான எதிர்பார்ப்பு 'ஸ்பைடர்' படத்தை தூக்கி சாப்பிடும் அளவிற்கு உள்ளது. ஸ்பைடர் படத்தின் எட்டு நாள் டிரைலர் ரெஸ்பான்ஸ், மெர்சல் படத்தின் ஒருநாள் டீசர் ரெஸ்பான்ஸின் பக்கம் கூட நெருங்க கூட முடியாத அளவிற்கு உள்ளது.
இந்த கம்பேரிசன் மூலம் 'மெர்சல்' படத்தின் மீதான எதிர்பார்ப்பு எந்த அளவிற்கு உள்ளது என்பதை கணிக்கும் போது, உண்மையாகவே மெர்சல்..... மெர்சல் தான்!.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.