சிபிஎஸ்இ பாடப் புத்தகத்தில் விஜய் புகைப்படம் இடம்பெற்றுள்ளதால், அவருடைய ரசிகர்கள் பரவசத்தில் ஆழ்ந்துள்ளனர்.
சமீபத்தில் வெளியான விஜய்யின் ‘மெர்சல்’ படத்தில், மருத்துவத்துறை சம்பந்தமான விருது பெறுவதற்காக வெளிநாடு செல்லும்போது கூட விஜய் வேட்டி – சட்டையில் செல்வது போன்ற காட்சி இருக்கும். அவர்மீது சந்தேகப்பட்டு, விமான நிலைய அதிகாரிகள் ஜட்டியுடன் நிற்கவைத்து சோதனை செய்வார்கள்.
பின்னர், விஜய் யார் எனத் தெரிந்துகொண்டு அவருக்கு மரியாதை கொடுப்பார்கள். அப்போது, வேட்டி – சட்டையின் பெருமை பற்றி விஜய் பேசுவார். அவர் எந்த நேரத்தில் அப்படி டயலாக் பேசினாரோ தெரியாது. பள்ளிப் பாடப் புத்தக்கத்தில் வேட்டி – சட்டை மாடலாக விஜய் இடம்பெற்றுள்ளார்.
சிபிஎஸ்இ பாடப்பிரிவில் மூன்றாம் வகுப்புக்கான பாடப் புத்தகத்தில் விஜய் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. பொங்கல் பண்டிகையைப் பற்றிய அந்தப் பாடத்தில், வேட்டி – சட்டைதான் தமிழர்களின் பாரம்பரிய உடை என்று குறிப்பிட்டு, விஜய் வேட்டி – சட்டையில் இருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளனர்.
இந்த விஷயம் விஜய் ரசிகர்களுக்குத் தெரியவர, தங்கள் தலைவன் புகைப்படம் பாடப் புத்தகத்தில் இருப்பதை நினைத்து பரவசப்படுகின்றனர்.
Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook
Web Title:Vijays photo on cbse text book