New Update
/tamil-ie/media/media_files/uploads/2017/10/dhruv-vikram.jpg)
திருமணத்தில் பட்டு வேட்டி - சட்டையுடன் கலந்துகொண்ட த்ருவ் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
சந்தீப் ரெட்டி இயக்கத்தில் வெளியான தெலுங்குப் படம் ‘அர்ஜுன் ரெட்டி’. விஜய் தேவர்கொண்டா ஹீரோவாகவும், ஷாலினி பாண்டே ஹீரோயினாகவும் நடித்துள்ளனர். கடந்த ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி இந்தப் படம் ரிலீஸானது.
5 கோடி ரூபாய் செலவில் எடுக்கப்பட்ட ‘அர்ஜுன் ரெட்டி’, 41 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்துள்ளது. எல்லா இடங்களிலும் பெரிய வரவேற்பைப் பெற்ற இந்தப் படத்தைத் தமிழில் ரீமேக் செய்ய பலர் போட்டி போட்டனர்.
கடைசியாக, நடிகர் விக்ரமின் மகன் த்ருவ் இந்தப் படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. தமிழ் ரீமேக்கை பாலா இயக்குவதாகவும் தெரிவித்தனர். தனக்கு ‘சேது’ மூலம் வாழ்க்கை கொடுத்த பாலாவை, செண்டிமெண்ட் படி தன் மகனையும் இயக்கச் சொல்லியிருக்கிறார் விக்ரம்.
தற்போது ஜோதிகா, ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் ‘நாச்சியார்’ படத்தை இயக்கிவருகிறார் பாலா. இந்தப் படம் முடிந்ததும், ‘அர்ஜுன் ரெட்டி’ ரீமேக்கை கையில் எடுக்கிறார் பாலா. இந்தப் படத்துக்காக நீளமான தலைமுடி, தாடி, மீசை வளர்த்து வருகிறார் த்ருவ்.
இன்று காலை விக்ரமின் மகளான அக்ஷிதாவுக்கும், மு.கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனோ ரஞ்சித்துக்கும் கோபாலபுரத்தில் திருமணம் நடைபெற்றது. இந்தத் திருமணத்தில் பட்டு வேட்டி - சட்டையுடன் கலந்துகொண்ட த்ருவ் புகைப்படம், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.