Advertisment
Presenting Partner
Desktop GIF

மகள் திருமண வரவேற்பில் பாட்டு பாடி அசத்திய விக்ரம்

தன்னுடைய மகள் திருமண வரவேற்பில், ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார் விக்ரம்.

author-image
cauveri manickam
புதுப்பிக்கப்பட்டது
New Update
மகள் திருமண வரவேற்பில் பாட்டு பாடி அசத்திய விக்ரம்

தன்னுடைய மகள் திருமண வரவேற்பில், ரசிகர்கள் கேட்டுக் கொண்டதற்காக பாடல் ஒன்றைப் பாடி அசத்தியுள்ளார் விக்ரம்.

Advertisment

விக்ரம் மகள் அக்‌ஷிதாவிற்கும், திமுக தலைவர் கருணாநிதியின் கொள்ளுப்பேரன் மனோ ரஞ்சித்துக்கும் கடந்த மாதம் 30ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சென்னை, கோபாலபுரத்தில் உள்ள தனது இல்லத்தில் திருமணத்தை நடத்தி வைத்தார் கருணாநிதி. சிலர் மட்டுமே இந்த திருமணத்தில் கலந்து கொண்டனர்.

இவர்களின் திருமண வரவேற்பு விழா, பாண்டிச்சேரி அருகிலுள்ள பட்டானூரில் அமைந்திருக்கும் சங்கமித்ரா திருமண மண்டபத்தில் நடைபெற்றது. சினிமா பிரபலங்கள், தொழில் அதிபர்கள், அரசியல் தலைவர்கள் உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். அத்துடன், தமிழ்நாடு, ஆந்திரா மற்றும் கேரளாவைச் சேர்ந்த 3000க்கும் மேற்பட்ட விக்ரம் ரசிகர்களும் இந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

இந்த நிகழ்ச்சியில், பிரபல பின்னணிப் பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் பங்கேற்ற இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. ரசிகர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, ‘மீரா’ படத்தில் இடம்பெற்ற ‘ஓ பட்டர்பிளை... பட்டர்பிளை...’ பாடலைப் பாடி, ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார் விக்ரம்.

Tamil Cinema
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment