அதிரடி ஆக்ஷ்ன் பேக்கேஜில் 'விக்ரம் - வேதா' டிரைலர்!

கோலையும் வீரனும் ஒன்னு வீரமான கோலையும் உண்டு...

இரட்டை இயக்குனர்கள் புஷ்கர் – காயத்ரி இயக்கத்தில் ஆர்.மாதவன், விஜய் சேதுபதி, வரலக்ஷ்மி சரத்குமார், கதிர், ஷ்ரத்தா ஸ்ரீநாத் ஆகியோர் நடித்திருக்கும் படம் ‘விக்ரம் – வேதா’. சாம் சிஎஸ் இசையில் உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலரை, ஷாரூக்கானும், சிவகார்த்திகேயனும் இன்று வெளியிட்டுள்ளனர்.

மாதவன் போலீஸாகவும், விஜய் சேதுபதி ரவுடியாகவும் நடித்துள்ள இந்தப் படத்தின் டிரைலரின் பின்னணியில் ஒரு பாடல் ஒன்றும் ஒலிக்கிறது. அந்தப் பாடலுடன் டிரைலரும் இதோ…

வாழ்க்க ஓடி ஓடி
அலஞ்சு திரிஞ்சு
ஒடஞ்சு முடிஞ்சு
ஆரமிச்ச இடத்த தேடி
வந்து நிக்கும் டா…

எல்லாம் முடிஞ்ச பின்ன
எரிய போறோம், பொதைய போறோம்
சொர்க்க நரகம் போனதுக்கு
சாட்சியில்லடா!

இந்த நொடி இருக்க, வாழ்ந்துக்கோ
நேரம் நல்லா இருந்தா, பொலச்சுக்கோ!
எதுவும் இங்க சரியும் இல்ல
தவருமில்ல, போடா!

கோலையும் வீரனும் ஒன்னு
வீரமான கோலையும் உண்டு…

தர்மமும் துரோகமும் ஒன்னு… ஒன்னு!
தர்மம் காக்க துரோகம் செஞ்சதுண்டு!

யாரையும் நம்பாதே…
நம்பினா மாறாதே!

போர்களம் போகாதே; போனால் நீயும்…
போரிடு, எதையும் யோசிக்காதே!!

×Close
×Close