விமல், ஓவியா நடிக்கும் ‘களவாணி 2’

8 வருடங்களுக்குப் பிறகு விமல், ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சற்குணம் இந்தப் படத்தை இயக்குகிறார்.

8 வருடங்களுக்குப் பிறகு விமல், ஓவியா நடித்த ‘களவாணி’ படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது.

சற்குணம் இயக்கத்தில், விமல் – ஓவியா நடிப்பில் ரிலீஸான படம் ‘களவாணி’. 2010ஆம் ஆண்டு ரிலீஸான இந்தப் படத்தின் மூலம்தான் முதன்முதலாக தமிழில் அறிமுகமானார் ஓவியா. இயக்குநர் சற்குணத்துக்கும் இதுதான் முதல் படம். ‘பசங்க’ படத்தைத் தொடர்ந்து விமல் ஹீரோவாக நடித்த இரண்டாவது படம் இது.

சரண்யா பொன்வண்ணன், இளவரசு, கஞ்சா கருப்பு, சூரி, திருமுருகன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். கஞ்சா கருப்பு – சூரி கூட்டணியில் பஞ்சாயத்து காமெடி இன்றளவும் சிரிக்க வைக்கும் வகையில் அற்புதமாக இருக்கும். அன்றைய மதிப்பில் ஒன்றரை கோடி ரூபாயில் தயாரிக்கப்பட்ட இந்தப் படம், 5 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்தது. அதுமட்டுமல்ல, படத்தில் நடித்த அனைவருக்குமே நல்ல பெயரையும் பெற்றுத் தந்தது.

8 வருடங்களுக்குப் பிறகு இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் தயாராகிறது. சற்குணம் இயக்க, முதல் பாகத்தில் நடித்த விமல், ஓவியாவே இந்தப் படத்திலும் நடிக்கின்றனர். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, சிவகார்த்திகேயன் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

×Close
×Close