விணுசக்கரவர்த்தி மறைவு; கவுண்டமணி வேதனை!

விணுசக்கரவர்த்தி ஒரு நல்ல நடிகர், அவரது மறைவு திரை உலகிற்கு ஒரு பேரிழப்பு

By: April 28, 2017, 2:05:22 PM

தமிழ், தெலுங்கு என பல மொழிகளில் நடித்து மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்தவர் விணுசக்கரவர்த்தி. வில்லனாக, குணச்சித்திர நடிகனாக, காமெடியனாக என இவர் கட்டாத வேடங்களே இல்லை. இவரது குரலே இவருக்கு பெரிய ப்ளஸ் என்று கூறலாம். அது வில்லன் வேடம் போட்டால் நக்கல் கலந்த கொடூரத்தையும், காமெடியன் வேடம் போட்டால் அப்படியே டோன் மாறி நம்மை சிரிக்கவும்  வைக்கும்.

இந்நிலையில், நேற்று சினிமா உலகத்தை விட்டுப் பிரிந்த விணுசக்கரவர்த்திக்கு பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில், சம காலத்தில் அவருடன் இணைந்து பல படங்களில் நடித்த கவுண்டமணி, தனது இரங்கலை இன்று வெளியிட்டுள்ளார். தினகரன் வெளியிட்டுள்ள செய்தியில், “விணுசக்கரவர்த்தி ஒரு நல்ல நடிகர் என்றும், அவரது மறைவு திரை உலகிற்கு ஒரு பேரிழப்பு. அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு ஆழ்ந்த அனுதாபங்கள்” என கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

Web Title:Vinuchakaravarthy died goundamani mourning

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

இதைப் பாருங்க!
X