அதாங்க…நம்ம தனுஷின் ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தின் ரிலீஸ் தேதியை தனுஷ் இன்று தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். (அப்போ ‘தங்கமகன்’ விஐபி பார்ட் -2 இல்லையானு கேட்கக் கூடாது).
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கியுள்ள இப்படத்தில் தனுஷ், கஜோல், அமலா பால் ஆகியோர் நடித்துள்ளனர் என்பது நமக்கு தெரிந்ததே. கிளாப் அடித்து ரஜினியே இப்படத்தை துவக்கி வைக்க, எந்தவித தடங்கலும் இல்லாமல், மிக வேகமாக வளர்ந்து வந்தது. இந்நிலையில், இப்படம் ஜுலை 28-ஆம் தேதி வெளியாகும் என ட்விட்டரில் தனுஷ் பதிவிட்டுள்ளார். அதனைக் கொஞ்சம் வித்தியாசமாக அறிவித்துள்ளார். அப்படி என்ன வித்தியாசம்? வீடியோவைப் பாருங்க.
Here we go 🙂 #vip2 release date 🙂 #birthdayspecial #raghuvaranisback #anotherjulyrelease @soundaryaarajni @KajolAtUN @theVcreations pic.twitter.com/gS1A1AxHqg
— Dhanush (@dhanushkraja) May 9, 2017
இப்போ டைட்டிலை படிங்க.