இதுதான் கேன்டிட் க்ளிக் என்பதோ… விருமன் நாயகியின் வித்தியாசமான போட்டோஷூட்

ஷங்கரின் மகள் இந்த படத்தின் நாயகி என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து விருமன் படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்தது.

இதுதான் கேன்டிட் க்ளிக் என்பதோ… விருமன் நாயகியின் வித்தியாசமான போட்டோஷூட்

தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் தற்போது தெலுங்கில் ராம்சரன் நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இவருக்கு இரண்டு மகள் மற்றும் ஒரு மகன் உள்ள நிலையில், இவரின் இளையமகள் அதிதி விருமன் படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகியுள்ளார்.

Image

இயக்குனர் முத்தையா இயக்கத்தில் தயாராகியுள்ள இந்த படத்தில் கார்த்தி, ராஜ்கிரன், பிரகாஷராஜ், சரண்யா பொன்வண்ணன், சூரி உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில், கார்த்திக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடித்துள்ளார்.

சமீபத்தில் வெளியான இப்படத்தின் பாடல்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதனிடையே விருமன் படம் இன்று (ஆகஸ்ட் 12) வெளியாகி உள்ளது.

ஷங்கரின் மகள் இந்த படத்தின் நாயகி என்ற அறிவிப்பு வெளியானதில் இருந்து படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில். டிரெய்லரை பார்த்து அவரின் நடிப்பை பலரும் புகழ்ந்து வருகின்றனர்.

மேலும் தனது அறிமுக படமாக விருமன் படத்தில் மதுரை வீரன் என்ற பாடலை பாடியதன் மூலம் முதல் படத்திலேயே பாடகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.

இன்று வெளியாகியுள்ள விருமன் படத்தில் அதிதியின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வரும் நிலையில், அவரின் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Viruman actress aditi shankar new and stylish photo shoot viral

Best of Express