விஷாலின் "துப்பறிவாளன்" டீசர்: என்ன கண்டறிகிறார் விஷால்?

விஷாலுக்கு கடைசியாக எந்தப் படமும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. இதனால்....

முதன்முறையாக ஒரு பெரிய ஹீரோவுடன் மிஷ்கின் கைக்கோர்த்து இருக்கும் படம் துப்பறிவாளன்.

விஷால் ஹீரோவாக நடிக்க, பிரசன்னா, வினய், சிம்ரன், ஆண்ட்ரியா, கே.பாக்யராஜ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கேரக்டர்களில் நடித்துள்ளனர். டிடக்டிவ் தொடர்பான கதைகளை எடுப்பதில் மிஷ்கின் ஒரு சிறந்த படைப்பாளி. பெரிய நட்சத்திரங்கள் இல்லாமல், நாம் கற்பனை செய்திராத நபர்களை முக்கிய கேரக்டராக வைத்து டிடக்டிவ் கதைகள் எடுப்பதில் அவர் வல்லுநர்.

ஆனால், இம்முறை அவர் இணைந்திருப்பது விஷாலுடன். ஸ்டார் அந்தஸ்த்துள்ள விஷால், டிடக்டிவ் கதாபாத்திரத்தில் நடிப்பது நிச்சயம் கூடுதல் சுவாரஸ்யம் தான்.

விஷாலுக்கு கடைசியாக எந்தப் படமும் பெரிதாக ஹிட் ஆகவில்லை. இதனால், துப்பறிவாளன் நிச்சயம் அவருக்கு ஒரு பிரேக் கொடுக்கும் என நம்பலாம். எது எப்படியோ, முழுக்க முழுக்க மிஷ்கினை நம்பி தான் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க தியேட்டருக்கு வருவார்கள் என்பது உண்மை.

மிஷ்கினின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஆரோல் கரோலி தான் இப்படத்திற்கும் இசை. இந்நிலையில், துப்பறிவாளன் படத்தின் டீசர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close