நடிகர் விஷாலின் கார் டிரைவர் மரணம் அடைந்ததிற்காக,விஷால் தக்க சமயத்தில் உதவாததே காரணம் என்று டிரைவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டியளித்துள்ளார்.
டிரைவர் மரணம்:
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான விஷால் பரபரப்பு நாயகன் என்று பலராலும் அழைக்கப்படுகிறார். நடிகர் சங்க தேர்தல், நடிகர் சங்க கட்டிடம், திருட்டு விசிடி ஒழிப்பு என தொடர்ச்சியாக பல்வேறு பணிகளில் அதிரடியாக ஈடுப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
சமீபத்தில் தனது 41 ஆவது பிறந்த நாள் அன்று மக்கள் நல இயக்கம் என்ற கட்சியையும் தொடக்கினார். இந்நிலையில் விஷாலிடன் சுமார் 3 ஆண்டுகளாக கார் டிரைவராக பணியாற்றி வந்தவர் பாண்டியராஜ். இவருக்கு பாண்டியராஜிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு திடீரென உடல்நிலை பாதிக்கப்பட்டது. ஆஸ்பத்திரியில் பரிசோதனை செய்து பார்த்த போது பாண்டியராஜிக்கு கணையத்தில் பாதிப்பு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது.
டிரைவர் பாண்டியராஜ் உடன் விஷால்
இதையடுத்து மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் பாண்டியராஜ் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சைக்கு போதிய பணம் இல்லாததால் பெற்றோர்கள் அவரை வீட்டிற்கு அழைத்து வந்தனர். இந்நிலையில் வீட்டுக்கு வந்த பாண்டியராஜ் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்நிலையில் பாண்டியராஜின் இறப்புக்கு விஷாலே காரணம் என்று, அவரின் தந்தை கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார். பேட்டியில் அவர் கூறியிருப்பது, “னது மகன் பாண்டியராஜ், நடிகர் விஷாலிடம் டிரைவராக வேலை பார்த்து வந்தான். அவனுக்கு உடல்நிலை சரியில்லாமல் போனதும், விஷால் தரப்பில் இருந்து ஆஸ்பத்திரியில் சேருங்கள், சிகிச்சைக்கு உதவி செய்கிறோம் என்று கூறினார்கள். அதை நம்பி மதுரையில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அவனை சேர்த்தோம்.
சுமார் ரூ.6 லட்சம் வரை செலவு செய்தோம். ஆனால் மேலும் செலவு செய்ய வழி இல்லை. எனவே, நாங்கள் அவனை வீட்டிற்கு அழைத்து வந்துவிட்டோம். பாண்டியராஜ் ஆஸ்பத்திரியில் இருந்த வரையிலும் சரி, இப்போது வரையிலும் சரி விஷால் தரப்பில் இருந்து யாரும் வந்து உதவி செல்லவில்லை. அவர்கள் ஏமாற்றி விட்டனர்.
அவர்கள் கூறியதை நம்பிதான் ஆஸ்பத்திரியில் சேர்த்தோம். சரியான நேரத்தில் அவர் உதவி செய்திருந்தால் எனது மகன் பிழைத்திருப்பான்” என்று கூறியுள்ளார்.