கட்டுக்கட்டாக பணக்குவியல்களுக்கு முன்னால் விஷால்... ஐடி ரெய்டு வீடியோவா இது?

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளுடன் விஷால் இருக்கும் வீடியோ வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இரண்டாயிரம் ரூபாய் நோட்டு கட்டுகளுடன் விஷால் இருக்கும் வீடியோ வெளியானதால், பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு விஷாலின் அலுவலகத்தில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. ஊழியர்களின் சம்பளத்தில் பிடித்தம் செய்யப்பட்ட வரியை முறையாகச் செலுத்திவிட்டார்களா என்று தெரிந்துகொள்வதற்காக இந்த சோதனை நடத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது. சோதனையில், 2016 – 2017ஆம் ஆண்டில் பிடித்தம் செய்யப்பட்ட 50 லட்சம் ரூபாய் வரியை செலுத்தவில்லை என்று தெரியவந்தது.

இதுதொடர்பாக, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு விஷாலுக்கு வருமான வரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பினர். ஆனால், விஷாலுக்குப் பதிலாக அவருடைய ஆடிட்டர் நேரில் ஆஜரானார்.

இந்நிலையில், ஏகப்பட்ட இரண்டாயிரம் ரூபாய் நோட்டுக் கட்டுகளுக்கு முன்னால் விஷால் இருப்பது போன்ற வீடியோ வெளியாகியுள்ளது. வருமான வரித்துறை அதிகாரிகள் கேள்வி கேட்பது போலவும், விஷால் பயந்தபடியே அதற்குப் பதில் சொல்வது போலவும் இருந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், வீடியோவின் இறுதியில் அர்ஜுன் வந்தபிறகுதான், அது ‘இரும்புத்திரை’ ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்டுள்ளது எனத் தெரியவந்தது. அதுவரை வீடியோவைப் பார்த்து ஷாக்கானவர்கள், உண்மை தெரிந்தபிறகு குபீரென சிரித்துவிட்டனர்.

×Close
×Close