எழில் இயக்கத்தில் விஷ்ணு விஷால் நடிக்கும் புதிய படத்திற்கு ‘ஜகதால கில்லாடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.
விஷ்ணு விஷால் – எழில் கூட்டணியில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்’. விஷ்ணு விஷால் ஜோடியாக நிக்கி கல்ரானி நடிக்க, ரோபோ சங்கர், ரவிமரியா, ‘ஆடுகளம்’ நரேன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், வையாபுரி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
சக்தி ஒளிப்பதிவு செய்ய, சத்யா இசை அமைத்திருந்தார். இந்தப் படத்தை விஷ்ணு விஷாலே சொந்தமாகத் தயாரிக்க, பாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் நிறுவனம் வெளியிட்டது. 2016ஆம் ஆண்டு வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து, விஷ்ணு விஷால் – எழில் இருவரும் மறுபடியும் இணைந்துள்ளனர்.
இந்தப் படத்துக்கு, ‘ஜகதால கில்லாடி’ எனப் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விஷ்ணு விஷால் ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடிக்க, முக்கிய கேரக்டரில் யோகிபாபு நடிக்கிறார். டி.இமான் இசையமைக்கும் இந்தப் படத்துக்கு, கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்கிறார். கதையை இ.முருகன் எழுத, ஜோதி அருணாச்சலம் வசனம் எழுதுகிறார்.