'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு... ரசிகர்கள் உற்சாகம்!

கமல்ஹாசன் 'விஸ்வரூபம் 2' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

கடந்த 2013-ம் ஆண்டு வெளியான கமல் ஹாசனின் ‘விஸ்வரூபம்’  படம் வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ‘விஸ்வரூபம் 2’ வெளியாகும் நாளை நோக்கி ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், அதற்கு பின்னர் கமல்ஹாசன் நடித்த ‘உத்தம வில்லன்’, ‘தூங்காவன்’,’பாபநாசம்’ உள்ளிட்ட திரைப்படங்கள் வெளியான நிலையில், ‘விஸ்வரூபம் 2’ எப்போது வெளியாகும் என்ற கேள்வி எழுந்தது.

விஸ்வரூபம் கொடுத்த வெற்றியால் இரண்டாவது பாகத்தை தயாரிக்க ஆஸ்கர் பிலிம்ஸ் ரவிச்சந்திரன் முன்வந்தார். ஆனால், இரண்டாம் பாகம் எடுப்பதில் கமல்ஹாசனுக்கும் படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரனுக்கும் இடையில், உரிமை தொடர்பாக சில பிரச்னைகள் இருந்ததால், வெளியீடு தள்ளிப்போனது. அதனால், ‘விஸ்வரூபம்-2’ படத்தை கமலே வெளியிட முயற்சி மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில்,  ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியாகும் என கமல் ஹாசன் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்திருந்தார். இது தொடர்பாக அவர் தெரிவித்ததாவது,  ” ‘விஸ்வரூபம் 2’ படத்தின் தமிழ், தெலுங்கு, ஹிந்தி போஸ்டர்கள் மாலை 7 மணிக்கு வெளியாகும்” என்று குறிப்பிட்டிருந்தார்.

இதனால், கமல்ஹாசன் ரசிகர்கள்  ‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

இந்நிலையில், கமல்ஹாசன்  ‘விஸ்வரூபம் 2’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

‘விஸ்வரூபம் 2’ திரைப்படத்தின் பணிகள் முழுவதையும் முடித்துவிட்டு, அடுத்தாக ‘சபாஷ் நாயுடு’ திரைப்படத்திற்காக பணிகளை கமல் தொடங்குவார் என்று கூறப்படுகிறது. இந்தப் படமும் தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் உருவாகி வருவது குறிப்பிடத்தக்கது.

 

×Close
×Close