அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகள் வியப்பில் ஆழ்த்தியது: பிரபல ஸ்டண்ட் கலைஞர் புகழாரம்

பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள்ல் உள்ள படங்களில் நடிக்க அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே நடிக்க முடியும்.

விவேகம் படத்தில் நடிகர் அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது என பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் புகழாரம் சூடியுள்ளார்.

இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான “விவேகம்” படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். அருடன் விவேக் ஓபராய், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 24-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த படத்தில், Casino Royale, 300: Rise Of An Empire, The Transporter Refunded போன்ற மாபெரும் வெற்றி பெற்ற ஹாலிவுட் படங்களில் நடித்த பிரபல ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜினும் (Serge Crozon Cazin) நடித்துள்ளார்.

இந்நிலையில், விவேகம் படத்தில் நடிகர் அஜித் நடித்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது என பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின் புகழாரம் சூடியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது: விவேகம் போன்ற ஒரு உண்மையான உலகத்தரம் வாய்ந்த படத்தின் மூலம் இந்திய சினிமாவில் கால் பாதிப்பதை நான் பெருமையாக கருதுகிறேன். இந்த கதாபாத்திரத்திற்கான நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பிறகே இயக்குனர் சிவா எனக்கு இந்த வாய்ப்பளித்தார். சிவாவின் காட்சிப்படுத்தல் முறையையும், படத்திற்கு என்ன வேண்டும் என்ற அவரின் தெளிவும் என்னை ஈர்த்தது.

அஜித்துடன் நடித்தது மறக்க முடியாத அனுபவமாகும். விவேகம் படத்தில் எனது காட்சிகளை முடித்து விட்டு நான் வீடு திரும்பி போது தான் அவர் இந்திய சினிமாவில் எவ்வளவு பெரிய ஸ்டார் என்றும் அவர் எவ்வளவு பெரிய பிரபலம் என்பதையும் தெரிந்துக்கொண்டேன். படப்பிடிப்பில் அவ்வளவு எளிமையாக இருந்தார். அவர் செய்த ஆக்ஷன் காட்சிகள் என்னை வியப்பில் ஆழ்த்தியது. டூப் வேண்டாம் என்று கூறி எல்லா சண்டை காட்சி சாகசங்களையும் தானே திறம்பட செய்து அசத்தினார். அவ்வளவு கடின உழைப்பாளி அவர்.

சர்வதேச தரம் வாய்ந்த உளவு சார்ந்த படங்களில் பிரமாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மிகவும் அவசியமானவை. அதற்கேற்ற திறமையும், உடல் மற்றும் மன பலம் உள்ள நடிகர்களால் மட்டுமே இவ்வாறான படங்களில் நடிக்க முடியும்.

படப்பிடிப்பு இடைவெளிகளில் அவருடன் நடந்த உரையாடல்கள் எனது மனதில் இனிய நினைவாக என்றுமே இருக்கும். அருமையாக படமாக்கப்பட்டுள்ள “விவேகம்” படத்தை இந்திய சினிமா ரசிகர்கள் நிச்சயம் ரசித்து கொண்டாடுவார்கள் என உறுதியாக கூறுவேன் என்றார்.

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vivegam ajiths action scenes impressed me co actor serge crozon cazin

Next Story
’பிக் பாஸ்’ வீட்டிற்குள் ஓவியா தற்கொலை முயற்சியா? காவல் துறை சந்திக்கவும் அனுமதி மறுப்பு!
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express