‘விவேகம்’ வெளியானால் அஜித் லெவலே வேற: சிவா

அஜித்தை தவிர ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் ஒருவர் கூட ‘விவேகம்’ படத்தில் இல்லை….

‘விவேகம்’ வெளியானால் அஜித் லெவலே வேற: சிவா

அஜித் நடித்த படங்களிலேயே அதிக நாள் வெளிநாட்டில் ஷூட் செய்யப்பட்ட படமென்றால் அது ‘விவேகம்’ தான். ஐரோப்பிய நாடுகளில் 72 நாட்கள் இதன் ஷூட்டிங் நடைபெற்றுள்ளது. அஜித் மிகவும் மெனக்கெட்டிருக்கும் படமும் இதுதான் என்கிறார்கள்.

சிலர், அவரது சிக்ஸ் பேக் உடலை கம்ப்யூட்டர் கிராஃபிக்ஸ் என்று கூறும் அளவிற்கு, தனது உடலை வறுத்தி, முறுக்கி, மெருகேற்றியுள்ளார். படத்தில் அஜித்தை பார்ப்பவர்கள் நிச்சயம் அவர் உடம்பை பார்த்து வாய் பிளப்பார்களாம்.

படத்தின் டீசர் வெளியாகி, இன்னும் ஒருவாரம் கூட ஆகவில்லை. அதற்குள் ஒரு கோடி ஹிட்ஸை கடந்து சென்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், அஜித்தை தவிர ‘வேதாளம்’ படத்தில் இடம்பெற்ற நடிகர்கள் ஒருவர் கூட ‘விவேகம்’ படத்தில் இடம்பெறக் கூடாது என்பதில் மிகுந்த கவனம் செலுத்தியிருக்கிறார் சிவா. அதுமட்டுமல்ல, முந்தைய படங்களின் சாயல் துளிகூட இந்தப் படத்தில் இருக்கக் கூடாது என்பதிலும் தெளிவாக இருந்துள்ளார். ‘விவேகம்’ மூலம் தமிழ் சினிமாவிற்கு முதன்முறையாக அறிமுகமாகும் அக்ஷராவுக்கு வித்தியாசமான கேரக்டராம். வில்லன் விவேக் ஓபராய் என்பது நம் அனைவருக்குமே தெரியும். “இதுவரை வெளிவந்த அஜித் படத்தின் எந்தச் சாயலும் ‘விவேகம்’ படத்தில் தெரியவே தெரியாது. ‘விவேகம்’ படம் ரிலீஸான பிறகு, அஜித்தின் லெவலே வேற!” என்று தனக்கு நெருக்கமான நண்பர்களிடம் கூறியிருக்கிறாராம் இயக்குநர் `விவேகம்’ சிவா.

நெவர்… எவர்… கிவ் அப்..! அது..!

Stay updated with the latest news headlines and all the latest Entertainment news download Indian Express Tamil App.

Web Title: Vivegam film makes ajith into huge market

Exit mobile version