அஜித் பிறந்தநாளில் 'விவேகம்' புதிய போஸ்டர் வெளியீடு... 'டீசர்' எப்போது ?

அஜித் பிறந்தநாளுக்கு டீசர் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், டீசர் வெளியிடப்படாமல், அதற்கு பதிலாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

‘விவேகம்’ படத்தில் பிஸியாக நடித்து வரும் நடித்து வரும் அஜித் தனது பிறந்தநாளை ஜாலியா படக்குழுவுடனே கொண்டாடி மகிழ்துள்ளார்.

இந்த ஆண்டு தல அஜித்துக்கு வயது 46. சிவா இயக்கத்தில் அஜித் நடித்து வரும்  ‘விவேகம்’ திரைப்படத்தில் விவேக் ஓபராய், காஜல் அகர்வால், அக்‌ஷரா ஹாசன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். தற்போது இறுதிகட்ட படப்பிடிப்பு பல்கேரியாவில் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஆகஸ்ட் 10-ம் தேதி படம் ரிலீஸ் செய்யப்படுவதாக கூறப்படும் நிலையில், அஜித் பிறந்தநாளுக்கு டீசர் வெளியிடுவார்கள் என ரசிகர்கள் காத்திருந்தனர். ஆனால், டீசர் வெளியிடப்படாமல், அதற்கு பதிலாக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளது படக்குழு.

இந்த திரைப்படத்தில் அஜித் இன்டர்போல் அதிகாரியாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் விவேகம் படத்தின் டீசர் மே-18-ந் தேதி வெளியிடப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், அஜித் பிறந்த நாளையொட்டி நடிகர்கள் பலர் ட்விட்டரில் வாழ்த்து மழை பொழிந்துள்ளனர்.

இயக்குநர் சிவா

இசையமைப்பாளர் அனிருத்

நடிகர் விவேக் ஓபராய்

நடிகர் தனுஷ்

நடிகர் ஆர்யா

 

×Close
×Close