"தல" அஜித்தின் விவேகம் படப் பாடல்கள் வெளியீடு: ரசிகர்கள் வரவேற்பு

"தல" அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

“தல” அஜித் நடிப்பில் உருவாகியிருக்கும் விவேகம் திரைப்படத்தின் அனைத்துப் பாடல்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்திய சினிமாவின் முதல் சர்வதேச உளவாளி படமான “விவேகம்” படத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ளார். அருடன் விவேக் ஓபராய், பிரபல ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர் சர்ஜ் க்ரோசோன் கஜின், காஜல் அகர்வால் மற்றும் அக்ஷராஹாசன் ஆகியோர் நடித்துள்ளனர். இந்த பிரம்மாண்ட படத்தை சிவா இயக்க, சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்துள்ளது. வருகிற 24-ம் தேதி ரிலீஸ் ஆகவுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இப்படத்தின் போஸ்டர், டீசர் என இப்படம் குறித்த அனைத்தும் வைரலாகி வருகிறது. அதேபோல், இந்தப் படத்துக்கான பாடல்கள் ஒவ்வொன்றாக இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. வேதாளம் படத்தைத் தொடர்ந்து, விவேகம் படத்திற்கும் அனிருத் இசையமைத்துள்ளார்.

விவேகம் படத்துக்காக முதலில் ரிலீஸான பாடல்,”சர்வைவா”. யோகிபி பாடிய இந்தப் பாடல், வெளியான சில மணி நேரங்களிலேயே வைரலானது. இதுவரை யூடியூபில் மட்டும் 90 லட்சத்துக்கும் மேற்பட்டோர் இந்த பாடலை பார்த்துள்ளனர்.

ஏற்கனவே, மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றுள்ள நிலையில், அனைத்துப் பாடல்களையும் இன்று மாலை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர். அதற்கான அறிவிப்பை இயக்குனர் சிவா வெளியிட்டிருந்தார்.

அதன்படி, விவேகம் படத்தின் அனைத்துப் பாடல்களும் தற்போது அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளன. தீம் சாங் உள்பட வெளியாகியுள்ள மொத்தம் ஏழு பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் பலத்த வரவேற்பை பெற்றுள்ளன.

×Close
×Close