அஜித் நடித்துவரும், ‘விவேகம்’ படத்துக்கான எதிர்பார்ப்பு, அவரது ரசிகர்கள் மத்தியில் நாளுக்குநாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வேதாளம், வீரம் உள்ளிட்ட படங்களில் இயக்குனர் சிவா, அஜித் கூட்டணி அமைத்த நிலையில், எதிர்பார்த்ததை போல அந்த திரைப்படங்கள் நல்ல வசூலையும் பெற்றுத்தந்தது. தற்போது அவர்கள் கூட்டணியில் 3-வது படமும் தயாராகி வருகிறது.
சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இந்த படமாது சிவா, அஜித் ஆகியோர் கூட்டணியால், மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படமானது அஜித்துக்கு 57-வது படம். இதில், கதாநாயகியாக காஜல் அகர்வால் நடித்துள்ளார். மேலும், வில்லனாக விவேக் ஓபராய், அக்ஷராஹாசன் உள்ளிட்டோரும் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். ரசிகர்களால் எதிர்பார்க்கப்படும் இப்படத்தின் காட்சிகள் பல்கேரியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் படமாக்கப்பட்டது. மேலும், ஹைதராபாத்திலும் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டன
இதனிடையே, அஜித்தின் கலக்கலான ஸ்டில்கள் வெளியாகி, ரசிகர்களுக்கு விருந்து படைத்தன. அஜித் பிறந்தநாளான மே 1-ம் தேதி விவேகம் திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த ஆவலோடு காத்திருந்தனர். ஆனால், அஜித் பிறந்தநாளுக்கு டீசர் எதுவும் வெளியிடப்படவில்லை, மாறாக அட்டகாசமான வகையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டது.
எனினும், டீசர் எப்போது வெளியிடப்படும் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில், அது குறித்து இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் நேற்று அறிவித்திருந்தார். அதில், வரும் 18-ந் தேதி விவேகத்தின் டீசர் வெளியிடப்படும் என தெரிவித்திருந்தார்.
SAI SAI #VIVEGAM teaser release 18th may 2017????????????????????????
— siva+director (@directorsiva) May 4, 2017
இந்நிலையில், விவேகத்தின் டீசர் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக இயக்குனர் சிவா தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது: விவேகத்தின் டீசர் தற்போது தயார் நிலையில் உள்ளது. ஏற்னெனவே அறிவித்த தேதிக்கு முன்னதாக மே 11-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார்.
????????Sai sai with the blessings of the almighty teaser #vivegam is ready ,preponing the teaser release date to 11th may Thursday????????
— siva+director (@directorsiva) May 5, 2017
மே 18-ம் தேதியில் இருந்து தற்போது மே 11-ம் தேதிக்கு டீசர் வெளியிடும் தேதி மாற்றப்பட்டுள்ளது. இந்த செய்தியானது ரசிகர்கள் மத்தியில் மேலும் ஆவலை அதிகரிக்கும் வகையில் அமைந்துள்ளது.