நடிகர் அஜித் நடித்து சமீபத்தில் வெளிவந்த ’விவேகம்’ திரைப்படத்தின் டீஸர் உலகளவில் அதிகளவிலான ‘லைக்’குகள் பெற்று உலக சாதனை படைத்தது.
Advertisment
நடிகர் அஜித், நடிகை காஜல் அகர்வால் நடித்த இத்திரைப்படத்தை இயக்குநர் சிவா இயக்கினார். இயக்குநர் சிவா ஏற்கனவே நடிகர் அஜித் நடித்த வீரம், வேதாளம் ஆகிய திரைப்படங்களை இயக்கியவர் என்பதால், ‘விவேகம்’ திரைப்படத்துக்கு கடும் எதிர்பார்ப்பு நிலவியது.
இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் மாதம் 24-ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் இன்று வரை வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்நிலையில், யுடியூபில் உலகளவில் அதிக லைக்குகளை பெற்ற திரைப்படம் என்ற உலக சாதனையை ‘விவேகம்’ திரைப்படம் பெற்றுள்ளது. ஏற்கனவே, இதற்கு முன்பாக 'ஸ்டார்வார்ஸ் - தி லாஸ்ட் ஜெடி' என்ற ஹாலிவுட் படத்தின் டீஸர் 5,72,000 லைக்குகளைப் பெற்றிருந்தது. இந்நிலையில், ‘விவேகம்’ திரைப்படம் 5,74,000 லைக்குகளை தாண்டி உலக சாதனையை படைத்திருக்கிறது. இத்திரைப்படத்தின் ட்ரெய்லர் மே மாதம் 10-ஆம் தேதி இணையத்தில் வெளியிடப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisment
Advertisements
#VIVEGAMTeaserSetsWorldRecord மற்றும் #VivegamTeaserAllSetToNewWR என்ற ஹேஷ் டேக்குகளுடன் அஜித் ரசிகர்கள் ட்விட்டர் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களின் கொண்டாடி வருகின்றனர்.