கமல் செய்தது தவறென்றால், இப்போ நீங்க செய்த காரியத்துக்கு என்ன பெயர்? – விவேக் ஓபராய் மீது குவியும் விமர்சனம்

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு, நேற்றுடன்(மே.19) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில், பெரும்பாலான முடிவுகளில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் […]

vivek oberoi about aishwarya rai
vivek oberoi about aishwarya rai

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவை பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு, நேற்றுடன்(மே.19) நிறைவடைந்தது. இதைத் தொடர்ந்து நேற்று மாலை 6.30 மணியளவில் எக்ஸிட் போல் எனப்படும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு வெளியானது. இதில், பெரும்பாலான முடிவுகளில் பாஜக கூட்டணி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கருத்துக் கணிப்பை கிண்டல் செய்வதாக நினைத்துக் கொண்டு, பாலிவுட் நடிகர் விவேக் ஓபராய், மீம்ஸ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை மோசமாக சித்தரித்து அந்த மீம்ஸ் போடப்பட்டுள்ளது.

ஐஸ்வர்யா ராய் – சல்மான் கான் உள்ள புகைப்படத்தைக் கருத்துக் கணிப்பு என்றும், ஐஸ்வர்யா ராய் – விவேக் ஓபராய் உள்ள படத்தை வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்பு என்றும் ஐஸ்வர்யா ராய், கணவர் அபிஷேக் பச்சன், மகளுடன் இருக்கும் புகைப்படத்தை தேர்தல் முடிவுகள் என்றும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சல்மான் கானை ஐஸ்வர்யா ராய் காதலிப்பதாக 2000ம் ஆண்டில் கிசுகிசுக்கப்பட்டது. பிறகு, 2004 காலக்கட்டத்தில் விவேக் ஓபராய்-யை ஐஸ்வர்யா ராய் காதலிப்பதாக வதந்திகள் பரவியது. இருப்பினும்,2007-ம் ஆண்டில் நடிகர் அபிஷேக் பச்சனை மணந்தார் ஐஸ்வர்யா ராய். இருவருக்கும் ஆராத்யா என்கிற மகள் இருக்கிறார்.

இந்நிலையில், ஐஸ்வர்யா ராயின் தனிப்பட்ட வாழ்க்கையை கிண்டல் செய்யும் விதமாக கோடிக் கணக்கானோர் புழங்கும் சமூக தளத்தில் இவ்வளவு வெளிப்படையாக விவேக் ஓபராய் கிண்டல் எனும் பெயரில் செய்திருக்கும் காரியம் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

“கிரியேட்டிவ், அரசியல் எதுவும் இல்லை. இதுதான் வாழ்க்கை என்று அந்த மீமைப் பகிர்ந்து அவர் விளக்கம் வேறு கொடுத்திருக்கிறார்.

சமீபத்தில் கமல்ஹாசன் ‘இந்து தீவிரவாதி’ என்று கூறியதற்கு வடக்கில் இருந்து முதல் ஆளாய் எதிர்ப்புக் குரல் கொடுத்து, கமல்ஹாசனுக்கு ‘நீங்க செய்தது நியாயமா?’ என்ற ரீதியில் கேள்வி எழுப்பி இருந்தவர் விவேக் ஓபராய்.

நீங்க செய்தது நியாயமா சார்?

Get the latest Tamil news and Entertainment news here. You can also read all the Entertainment news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Vivek oberoi controversial tweet about aishwarya rai and election results

Next Story
Monster Movie In Tamilrockers: காஞ்சனா 3 டிஜிட்டல் பிரின்ட், மான்ஸ்டர்… தமிழ் ராக்கர்ஸின் ‘வீக் என்ட்’ கொண்டாட்டம் நியாயமா?Kanchana 3 full movie HD print, tamilrockers, monster, tamil movie, காஞ்சனா 3 ஃபுல் மூவி இன் தமிழ்
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
X