Advertisment
Presenting Partner
Desktop GIF

சாராவுடன் நிகழ்ச்சி பண்ணும்போது பயமா இருக்கு... உண்மையை உடைத்த விஜே அர்ச்சனா

குழந்தைகள் நம்மிடம் சொல்ல தயங்குவதற்கு காரணமே அவர்களை திட்டுவோம் என்பதனால் தான். சமூதாயம் என்ன நினைக்கும் என்பதை பற்றிதான் இங்கு நிறைய பேருக்கு கவலை.

author-image
D. Elayaraja
New Update
சாராவுடன் நிகழ்ச்சி பண்ணும்போது பயமா இருக்கு... உண்மையை உடைத்த விஜே அர்ச்சனா

சின்னத்திரையின் முன்னணி தொகுப்பாளிகளில் ஒருவர் அர்ச்சனா. 1999-ம் ஆண்டு கல்லூரியில் படிக்கும்போதே ஜெயா டிவியின் ஆங்கில நியூஸ் ரீடராக பணியாற்றிய அவர், 2000-ம் ஆண்டு சன்டிவியின் காமெடி டைம் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானார். இநத நிகழ்ச்சியின் மூலம் புகழ்பெற்ற இவர் அதன்பிறகு காமெடி டைம் அர்ச்சனா என்ற பெயருடன் சின்னத்திரையில் வலம் வந்தார்.

Advertisment

தொடர்ந்து இளமை புதுமை, கலக்கப்போவது யாரு, சரி கம ப உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா, கடந்த ஆண்டு ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் பங்கேற்றார். அதன்பிறகு விஜய் டிவியின் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய அர்ச்சனா தற்போது ஜீ தமிழின் சூப்பர் மாம் என்ற நிகழ்ச்சிளை தொகுத்து வழங்கி வருகிறார்.

அம்மா மகள் இணைந்து பங்கேற்கும் இந்நிகழ்ச்சியை அர்ச்சனா தனது மகள் சாராவுடன் தொகுத்து வழங்கி வருகிறார். அம்மாவை போலவே நிகழ்ச்சி தொகுப்பில் அசத்தி வரும் சாரா தற்போது தனது அம்மாவுக்கே டஃப் கொடுக்கும் அளவுக்கு தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

இதனிடையே சூப்பர் மாம் நிகழ்ச்சி குறித்து அர்ச்சனா தனது மகளுடன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவது பற்றியும் கேட்பதற்காக அர்ச்சனாவை தொடர்புகொண்டோம்.

சின்னத்திரையில் அறிமுகமானது எப்போது?

1999-ம் ஆண்டு கல்லூரியில் கல்ச்சுரல் செக்ரட்ரியாக இருக்கும்போது ஜெயா டிவியில் ஆங்கிலத்தில் செய்தி வாசிப்பதற்காக ஒரு பெண் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து இன்டர்வியூ அட்டன் பண்ணி செலக்ட் ஆனேன். அதுதான் சின்னத்திரை என்ட்ரி. அதன்பிறகு நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

நிறைய நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி இருந்தாலும், அனைவரையும் என்னுடன் கனக்ட் செய்யக்கூடிய நிகழ்ச்சி சூப்பர் மாம். இந்த நிகழ்ச்சி எனக்கு மட்டுமல்ல சாராவுக்கும் முக்கியமானது. அதே சமயம் எனக்கு ஒரு பெரிய அங்கீகாரம் கொடுத்த நிகழ்ச்சி என்று நம்புகிறேன்.

சின்னத்திரையில் உங்களை பிரபலமாக்கிய காமெடி டைம் நிகழ்ச்சி பற்றி...

தொலைக்காட்சி மட்டும் தனியாக இருந்த காலக்கட்டம் சோசியல் மீடியா அப்போது பெரிய அளவில் இல்லை. ஒரு க்ளீன் எண்டர்டைன்மெண்ட் இருந்த காலக்கட்டம் அது. ஆனால் அப்போது திருமணம் குழந்தை என்ற வாழ்க்கையின் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தேன். திரையில் பெரிய ஆளாக இருக்க வேண்டும் என்றால் திருமணம் செய்துகொள்ளக்கூடாது என்ற விதியை உடைத்தேன்.

பிரபலமாக இருக்கும்போதே குழந்தை பெற்றுக்கொண்டாள் என்று இப்போது சொல்கிறார்கள் ஆனால் இதை நான் அப்போதே செய்துவிட்டேன். அதன்பிறகு திரும்பி வந்து நிறைய நிகழ்ச்சிகள் பண்ணேன். அப்போது தான் ஜீ தமிழின் அதிஷ்ட லட்சுமி, சரிகமப உள்ளி்ட நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினேன்.

publive-image

பிக்பாஸ் நிகழ்ச்சி தொடர்பான விமர்சனங்களின் பாதிப்பு?

பிக்பாஸ் நிகழச்சி நமது அடையாளங்களை அழிக்கக்கூடிய ஒரு காலக்கட்டத்தை கொடுத்தது. இப்போது அதில் இருந்து மீண்டு வந்துள்ளேன். 67 நாட்களில் ஒரு மணி நேரம் பார்த்து ஒருவரின் வாழ்க்கையை நிர்ணையிக்கக்கூடிய நிகழ்ச்சி இது. இதை யாரும் ஒரு ரியாலிட்டி ஷோவாக பார்ப்பது இல்லை.

67 நாட்களில் 12 டாஸ்க்குள் அட்டன் பண்ணி 9 டாஸ்க்குகளில் நல்ல நிலையில் இருந்தும் பிரையோஜனம் இல்லை. அதேபோல் கமல் சாரிடம் இருந்து பல பாராட்டுக்களை பெற்றும் எந்த பயனும் இல்லை. எதெல்லாம் எப்படி காண்பிக்க வேண்டுமே அப்படித்தான் காண்பிப்பார்கள். அந்த நிகழ்ச்சிளை பற்றி அதிகம் பேச விரும்பவில்லை. ஒரு சில நேரங்களில் ஒரு இடத்தில் இருந்து மீண்டு வர ஆசைப்படுவோம். அதுபோல் வாழக்கையை கற்றுக்கொண்ட ஒரு இடம்தான் பிக்பாஸ்.

சூப்பர் மாம் நிகழ்ச்சி தாய் – மகள் காமினேஷன்

இந்தியாவில் மட்டுமல்லாமல் ஆசியாவிலேயே ஒரு நிகழ்ச்சியை தாய் மகள் இருவரும் தொகுத்து வழங்குவது இந்த நிகழ்ச்சிதான் என்று பேசப்படும் உண்மையான தாயும் மகளும் சேர்ந்து தொகுத்து வழங்கக்கூடிய ஒரு நிகழ்ச்சி. சாரா முதலில் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வரும்போது அவளுக்கு வயது 11. இப்போது 3-வது சீசனில் அவருக்கு வயது 13 ஆகிவிட்டது. இப்போது 3-வது சீசன் ஒளிபரப்பாகிறது. இந்த நிகழ்ச்சியின் மூலம் தாயும் மகளுமாக நாங்களும் வளர்ந்திருக்கிறோம். அதேபோல் இந்த நிகழ்ச்சியின் மூலம் தான் சாராவும என்னுடன் அதிகமக டைம் ஸ்பெண்ட் பண்ண முடிகிறது. அதேபோல் ஒரு அம்மாவாக நானும் இந்த நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக்கொண்டேன்.

தனியாக நிகழ்ச்சியை தொகுத்து வழங்கியதற்கும் – மகளுடன் இணைந்து வழங்குதற்கும் எப்படி உணர்கிறீர்கள்?

மகளுடன் சேர்ந்து நிகழ்ச்சி பண்ணும்போது பயம் அதிகமாக இருக்கிறது. நான் பேசினால் கூட அவரது முகத்தை தான் காட்டுகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் சாரா வயதில் நிறைய குழந்தைகள் இருக்கிறார்கள். அதனால் நாம் ஒரு விஷயத்தை விளைாட்டாக சொன்னாலும் குழந்தைகள் மனதில் ஆழமாக பதிந்துவிடுகிறது. அதனால் நாம் செய்யக்கூடிய அனைத்து விஷயங்களும் மரியாதைக்குரியதாக இருக்க வேண்டும்.

அதனால் இந்த நிகழ்ச்சியில் நாங்கள் மட்டுமல்ல பங்கேற்றுள்ள 10 தாய்மார்களும் கவனமாக பேசி வருகின்றனர். அவர்கள் இங்கே கற்றுக்காள்ளவும் வந்திருக்கிறர்கள் கற்றுக்கொடுக்கவும் வந்திருக்கிறார்கள். அதனைத்தையும் சமமாக தெரிந்துகொள்ள வேண்டும்.

சூப்பர் மாம் நிகழ்ச்சியில் குஷ்பு என்ட்ரி...

குஷ்பு அவர்ளுடன் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் என்ற நிகழ்ச்சியில் சக நடுவராக இருந்துள்ளேன். மிகவும் மகிழ்ச்சியான ஒரு நபர்தான் குஷ்பு. அவர் ஒரு இடத்தில் இருந்தால் இந்த இடமே பட்டாசுபோல் வெடித்துக்கொண்டே இருக்கும். மனதில் பட்டதை வெளிப்படையாக சொல்லிவிடுபவர். எந்த நிலையில் சோம்பலை தனது முகத்தில் காட்டாமல் புன்னகையுடன் இருப்பவர். எப்போதுமே பெண்ணியத்திற்கு ஆதரவு கொடுப்பவர். ஒரு வலிமையான நபர்.

டாக்டர் படத்தில் நடித்த அனுபவம்

நடிகர் சிவகார்த்திகேயனுடன் வொர்க் பண்ற ஒரு வாய்ப்பு கிடைத்தது. ஒரு தாயும் மகளும் சேர்ந்த மாதிரி நடிப்பதற்கான வாய்ப்பு இனிமேல் கிடைக்குமானு தெரியல இதுக்கு முன்னாள் நடிச்சிருக்காங்களானும் தெரியல. படத்திலேயும் தாயும் மகளுமாக நடிப்பதற்கான வாய்ப்பு கிடைத்தது. இது ஒரு உணர்வுப்பூர்வமான தருணம். இந்த படத்தை பார்த்துவிட்டு நடிகை ஷகீலா அம்மா போன் பண்ணாங்க. நீ உன் மகள் என்பதால் தான் இப்படி நடித்திருக்கிறாய். வேறு யாராக இருந்தாலும் இப்படி நடித்திருக்க மாட்டார்கள் என்று சொன்னார்.

publive-image

மீண்டும் விஜய் டிவிக்கு எப்போது வருவீர்கள்?

விஜய் டிவிக்கு இப்போதைக்கு வர வாய்ப்பில்லை. இப்போதைக்கு ஜீ தமிழில் இருக்கிறேன். இன்னும் சொல்லப்போனால் நான் இங்கிருந்துதான் ரிட்டைர்மெண்ட் ஆவேன். அடுத்த பட வாய்ப்புக்காக காத்திருக்கிறேன்.

பெண் குழந்தைகள் வன்கொடுமை குறித்து பெற்றோர்களுக்கு நீங்கள் என்ன சொல்ல விருப்பப்படுகிறீர்கள்?

பெற்றோர்கள் அனைவரும் தங்களது குழந்தைகளிடம் பேச தொடங்க வேண்டும். சமூகத்தில் இப்படி ஒரு விஷயம் நடந்துகொண்டிருக்கிறது. எதாவது ஒரு தப்பு நடந்தால் குழந்தையை தி்ட்டாதீர்கள். அந்த தப்பை செய்தவர்களை தட்டி கேளுங்கள். குழந்தைகள் நம்மிடம் சொல்ல தயங்குவதற்கு காரணமே அவர்களை திட்டுவோம் என்பதனால் தான். சமூதாயம் என்ன நினைக்கும் என்பதை பற்றிதான் இங்கு நிறைய பேருக்கு கவலை.

இப்படி ஒரு விஷயம் நடந்தால் 3 நாட்கள் சமூதாயம் பேசும் ஆனால் 30-வது நாள் இப்படி ஒரு விஷயம் நடநதாக மறந்து மதிக்கவே மதிக்காது. தயவு செயது பெண் குழந்தை ஆண்குழந்தை யாராக இருந்தாலும் அவர்களிடம் பேச வேண்டும். இப்போது அதிகம் பெண் குழந்தைகள் பற்றிய வன்கொடுமைகள் குறித்தான் பேசிக்கொண்டிருக்கிறோம். ஆனால் பெற்றோர்கள் என்று வரும்போது இருவருக்குமே இரு குழந்தைகளும் சமம் தான்.

இருவருக்குமே குட் டச் பேட் சட் என்றால் என்ன என்பதை சொல்லிக்கொடுப்பது அவசியம். இதை எல்லாம் சின்ன வயதில் இருந்தே கற்றுத்தர வேண்டியது அவசியம் உடைகளை காரணம் காட்டுவதை விட்டுவிட்டு கண்ணோட்டம் தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். வளரும்போதே குழந்தைகளுக்கு அனைத்தையும் சொல்லிக்கொடுத்து வளர்த்தாலே இந்த சமுதாயம் அழகாக மாறும். பெண்ணும் ஆணும் சமம் என்பதை திரும்ப திரும்ப வலியுறுத்தவேண்டும் என்று கூறியுள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment