Advertisment

மாயவரம், பல்லாவரம், தாம்பரம்... விஜே சித்ரா கடைசி பஞ்ச் டயலாக் வீடியோ

சீரியல் நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு கடைசியாக பங்கேற்ற ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியில் பேசிய பன்ச் டயலாக் வீடியோ வைரலாகி வருகிறது.

author-image
WebDesk
New Update
vj chitra, chitra, actress chitra, chitrs last punch dialogue video, விஜே சித்ரா, சித்ரா கடை பன்ச் டயலாக், விஜய் டிவி, வைரல் வீடியோ, vijay television, viral vido, pandian stores, mullai chitra, chithra viral video, start music, ஸ்டார்ட் மியூஸிக்

மறைந்த சீரியல் நடிகை விஜே சித்ரா இறப்பதற்கு முன்பு கடைசியாக பங்கேற்ற ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியில் பேசிய பன்ச் டயலாக் வீடியோ வைரலாகி வருகிறது.

Advertisment

தொலைக்காட்சிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராக அறிமுகமாகி பின்னர் சீரியலில் நடித்து ஏராளமான ரசிகர்களை கவர்ந்தவர் விஜே சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் விஜய் சித்ரா முல்லை கதா பாத்திரத்தில் நடித்து பட்டிதொட்டியெங்கும் பிரபலமானார். ஒரு திரைப்படத்திலும் நடித்தார்.

இந்த நிலையில்தான், விஜே சித்ரா கடந்த ஆண்டு டிசம்பர் 9ம் தேதி பூந்தமல்லி அருகே நசரேத்பேட்டையில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் திரையுலகத்தினரையும் தொலைக்காட்சி பார்வையாளர்களையும் கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சித்ராவை அவருடைய கணவர் ஹேம்நாத்துதான் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சித்ரா இறந்து 1 மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், விஜய் டிவி சித்ரா கடைசியாக பங்கேற்ற ‘ஸ்டார்ட் மியூஸிக்’ நிகழ்ச்சியில் பேசிய பன்ச் டயலாக் வீடியோவை வெளியிட்டுள்ளது.

அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட விஜே சித்ரா, “மாயவரம், பல்லாவரம், தாம்பரம்... இதுக்கு மேல ரெண்டு பேரும் பேசனா என் வாய்ல நல்லா வரும்” என்று கூறி புகழ், மணிமேகலை ஆகிய இருவரையும் கலாய்க்கிறார்.

இந்த வீடியோ விஜே சித்ராவின் நினைவை நெட்டிசன்கள், மற்றும் தொலைக்காட்சி பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil"
Vijay Tv Vj Chitra
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment