பாலிவுட் நடிகர் இந்தர் குமார் இன்று காலமானமானார்.
இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 43.
1996-ம் ஆண்டில் திலையுலகில் அறிமுகமான அவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகாலம் சினிமா துறையில் இருந்த அவர் ப்ளேயிங் கெஸ்ட்( Paying Guest) வான்டெட் (2009) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு வெளியான யே தூரியன்( Yeh Dooriyan) திரைப்படத்தில் அவர் கடைசியாக தோன்றினார். நடிகர் சல்மான் கானுடன், இந்தர் குமார் நெருக்கமானவர் என்பதால், இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றனர்.
இந்தர் குமார் சர்ச்சைகளையும் கடந்து வந்தவர். கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் இந்தர் குமார் கைதானர். விசாரணையில், அந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்ட இந்தர் குமார், ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று தெரிவித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.
அவருக்கு பல்லவி ஷரஃப் என்ற மனைவியும், ஷாம்ஷன் பூமி என்ற மகளும் உள்ளனர். பாலிவுட் திரையுலகத்தினர் இந்தர் குமாரின் மறைவையொட்டி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளதாவது: சிறந்த மனிதரான இந்தர் குமார் என்னுடன் எப்போதும் அன்பாகவே நடந்து கொள்வார். அவரின் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.