பாலிவுட் நடிகர் இந்தர் குமார் காலமானார்!

20 ஆண்டுகாலம் சினிமா துறையில் இருந்த அவர் ப்ளேயிங் கெஸ்ட்( Paying Guest) வான்டெட் (2009) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார்.

பாலிவுட் நடிகர் இந்தர் குமார் இன்று காலமானமானார்.

இன்று அதிகாலை 2 மணியளவில் இந்தர் குமாருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர் எதிர்பாராத விதமாக மரணமடைந்தார். அவருக்கு வயது 43.

1996-ம் ஆண்டில் திலையுலகில் அறிமுகமான அவர் 20-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 20 ஆண்டுகாலம் சினிமா துறையில் இருந்த அவர் ப்ளேயிங் கெஸ்ட்( Paying Guest) வான்டெட் (2009) உள்ளிட்ட பல்வேறு திரைப்படங்களில் துணை நடிகராக நடித்திருக்கிறார். கடந்த 2011-ம் ஆண்டு வெளியான யே தூரியன்( Yeh Dooriyan) திரைப்படத்தில் அவர் கடைசியாக தோன்றினார். நடிகர் சல்மான் கானுடன், இந்தர் குமார் நெருக்கமானவர் என்பதால், இருவரும் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கின்றனர்.

Inder kumar

இந்தர் குமார் சர்ச்சைகளையும் கடந்து வந்தவர். கடந்த 2014-ம் ஆண்டு பாலியல் பலாத்கார வழக்கில் இந்தர் குமார் கைதானர். விசாரணையில், அந்த பெண்ணுடன் உறவு வைத்திருந்ததாக ஒப்புக்கொண்ட இந்தர் குமார், ஆனால் பாலியல் பலாத்காரம் செய்யவில்லை என்று தெரிவித்தார். பின்னர் 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் அவர் ஜாமீனில் வெளிவந்தார்.

அவருக்கு பல்லவி ஷரஃப் என்ற மனைவியும், ஷாம்ஷன் பூமி என்ற மகளும் உள்ளனர். பாலிவுட் திரையுலகத்தினர் இந்தர் குமாரின் மறைவையொட்டி ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து அபிஷேக் பச்சன் தெரிவித்துள்ளதாவது: சிறந்த மனிதரான இந்தர் குமார் என்னுடன் எப்போதும் அன்பாகவே நடந்து கொள்வார். அவரின் மறைவு வேதனையை ஏற்படுத்துகிறது என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close