நடிகர் சூர்யா உட்பட எட்டு பேருக்கு நீலகிரி குற்றவியல் நீதிமன்றம் இன்று ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்த்துள்ளது.
தினமலர் நாளிதழில் பாலியல் தொழில் குறித்த செய்தியில் ’நடிகைகள் எவ்வளவு தொகை’ என்று போட்டது சர்ச்சையானது. அப்போது சரத்குமார் அளித்த புகாரில் தினமலர் ஆசிரியர் லெனின் கைது செய்யப்பட்டார்.
பின்னர் இதை கண்டித்து நடிகர் சங்கம் சார்பில் நடந்த கூட்டத்தில் பிரியாணிக்கும் ரூ. 500க்கும் அலைந்து கொண்டு வருபவர்கள்தான் பத்திரிகையாளர்கள் என்று சூர்யா பேசினார். நடிகர் விவேக் பேசும் போது, பத்திரிகையாளர்களின் வீட்டு பெண்களின் படங்களை தாருங்கள் பிரா உள்ளாடையுடன் கிராபிக்ஸ் செய்து போடுகிறேன் என்று பேசினார்.
ஸ்ரீப்ரியா பத்திரிகையாளர்களை தரக்குறைவான ஆங்கிலத்தில் திட்டி பேசினார். தனது மகளுக்கு ஸ்ரீப்ரியா தான் ஆதர்ஷன் வழிகாட்டி பேசிய சத்தியராஜ், ஸ்ரீப்ரியா பேசியது ஆங்கிலம் என்பதால் அனேகம் பேருக்கு தெரியாது அதை மொழி பெயர்த்து தமிழில் திட்டுகிறேன் என்று சொன்னார்.
இதையடுத்து நீலகிரி நீதிமன்றத்தில் பத்திரிகையாளர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகாத நடிகர்கள் சூர்யா, சத்தியராஜ், விஜயகுமார், விவேக், அருண்விஜய், ஸ்ரீப்ரியா, சேரன் ஆகியோரை நேரில் ஆஜர் படுத்த நீதிபதி உத்தரவிட்டார்.