அந்த நோயால் நான் தினம் தினம் அவதிப்படுகிறேன்: உண்மையை கொட்டிய நடிகை இலியானா!

என்னுடைய 15 வயதின் போது நான் இந்தத் தொல்லையால் பாதிக்கப்பட ஆரம்பித்தேன்

By: Published: September 19, 2017, 2:14:08 PM

தென்னிந்தியாவின் மிகப்பெரிய நடிகையாக வலம் வந்தவர் நடிகை இலியானா டி க்ரூஸ். கமெர்ஷியல் குயினாகவும், சிறந்த நடிகையாகவும் பெயர் பெற்றவர் இவர். குறிப்பாக, பாலிவுட்டில் இவர் நடித்த பர்ஃபி திரைப்படத்தைப் பார்த்துவிட்டு அனைவரும் இலியானாவின் நடிப்பால் பிரமித்துப் போனார்கள். இப்படி ரசிகர்களால் பிரம்மிப்புடன் பார்க்கப்பட்ட இலியானா, தன் மீதே நம்பிக்கை இல்லாமல் வாழ்ந்து வருபவர் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஒரு ஜீன்ஸ் விளம்பரத்திற்காக ‘குறும்படம்’ ஒன்றில் பேசியிருக்கும் இலியானா இந்த உண்மையை வெளி உலகுக்கு தெரிவித்துள்ளார். 15 வருடங்களாக ‘body dysmorphic disorder’ எனும் நோயுடன் தான் போராடி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

‘Body dysmorphic disorder’ என்பது தனது உடலமைப்பை பார்த்து தானே வெறுப்பது போன்ற குறைபாடாகும். அதாவது, ஒருவர் கண்ணாடி முன் நின்று, தன் தோற்றத்தைப் பார்த்து தானே வெறுப்பதாகும். இதனால், அவர்கள் தன் மீதான நம்பிக்கையை இழந்து, மற்றவர்களை விட்டு தனித்தே காணப்படுவார்கள்.

இதுகுறித்து இலியானா அந்த வீடியோவில் பேசியதாவது, “இந்த ‘body dysmorphic disorder’ பிரச்சனையால் நான் மன உளைச்சலுடன் சண்டைப் போட்டுக் கொண்டிருக்கிறேன். மற்றவர்களுக்கு பிடித்தவாறு நடந்து கொள்ள வேண்டும் என தொடர்ந்து முயற்சிகள் மேற்கொள்கிறேன். நான் சினிமாவில் 11 வருடங்களை தற்போது நிறைவு செய்துள்ளேன். ஆனால், அது எனது திட்டமாக இருக்கவில்லை. பருவம் எய்திய பின் நான் மிகவும் வெட்கப்படுபவளாகவும், சுய உணர்வுடைய பெண்ணாகவும் இருந்தேன். எனது உடல் அமைப்பைக் குறித்து தொடர்ந்து கவலைப்பட்டேன். என்னுடைய 15 வயதின் போது நான் இந்தத் தொல்லையால் பாதிக்கப்பட ஆரம்பித்தேன். நான் ‘body dysmorphic disorder’ பிரச்சனையில் இருப்பதை உணரவே இல்லை. மூன்று வருடங்களுக்கு முன்பு, நான் உச்சக்கட்ட மன அழுத்தத்தில் இருந்தேன்” என்றார்.

இலியானா அந்த வீடியோவில், நம்பிக்கை ஏற்படுத்தும் விதத்தில் அதிகம் பேசியுள்ளார். ஒவ்வொரு பிரச்னைக்கு தீர்வு உண்டு என்று எழுச்சி ஏற்படுத்தும் வகையில் அவரது பேச்சு அமைந்துள்ளது. மேலும் அவர் கூறுகையில், “என்ன விஷயமாக இருந்தாலும் அதை தைரியமாக ஒப்புக் கொள்ள முதலில் முன் வர வேண்டும். அதுவே மிகப்பெரிய முன்னேற்றம் தான். நான் அதற்கு தினமும் முயற்சி செய்து வருகிறேன்” என்றார்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Entertainment News in Tamil by following us on Twitter and Facebook

Web Title:Watch ileana dcruz struggled with depression and body dysmorphic disorder for 15 years

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
பிரபலமானவை
Advertisement

JUST NOW
X